4000 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை.!

 

வட மாகாணத்தில் கடமைகளில் ஈடுபடுத்துவதற்காக 4000 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களைப் புதிதாக இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் தமிழ் உத்தியோகத்தர்களில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளைக் கையாளக்கூடிய திறன் கொண்டவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட மாகாணத்திலிருந்து இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படும் உத்தியோகத்தர்களின் குடும்பப் பின்னணி, அவர்களின் நடத்தை மற்றும் கல்வித் தகைமைகள் குறித்தும் பலத்த கவனம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எல்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்திலிருந்து இணைத்துக் கொள்ளப்படவுள்ள இந்த 4000 உத்தியோகத்தர்களில், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சாரதிகளும் உள்ளடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் நாட்களில் வட மாகாணத்தின் பல இடங்களில் நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தினால் கடுமையான ஆளணி வளப்பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.