கே.பி: குமரன் பத்மநாதனின் தங்கக் குவியல் எங்கே?

 

-தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் விசாரணைகள்

கே.பி. என அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான குமரன் பத்மநாதனிடம் இருந்திருக்கக் கூடிய பெருந்தொகையான தங்கக் கட்டிகள் மற்றும் ஆபரணங்கள் எவ்வாறு காணாமல் போயின என்பது தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

குமரன் பத்மநாதனை பாதுகாப்புப் படையினர் கைது செய்தபோது அவரிடமிருந்த பெருந்தொகை யான தங்கம் பாதுகாப்பு படையினர் வசம் வந்தது. பின்னர், அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்தத் தங்கம் மாயமாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுவதையடுத்தே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தது. அப்போது பதவியில் இருந்த உயர் இராணுவ அதிகாரிகள் ஆணைக்குழுவின் விசாரணை வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

தற்போது விசாரணை துரிதப்படுத்தப்பட்டிருப் பதையடுத்து பாதுகாப்புத் துறையின் உயர் மட்ட அதிகாரிகளை விரிவான விசாரணைக்குட்படுத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சேரிக்கப் பட்ட தகவல்களையடுத்து பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் விசாரிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

இதே சமயம் யுத்தத்தின் போது இராணுவத் தளபதியாக பதவி வகித்த சரத் பொன்சேகாவிட மும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அக்காலப் பகுதியில் தான் பாதுகாப்பு சபையின் தலைவராக விளங்கியதால் கே.பியின் தங்க பரிமற்றம் தொடர்பாக தான் எதுவும் அறிந்திருக்கவில்லை என அவர் தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு படையினரால் கையேற்கப்பட்ட தங்கம் பின்னர் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அதற்கு என்ன நடந்தது என்பது குறித்தே விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.