நடந்து முடிந்த 2026 தேர்தலில் சுமார் 35% சதவீத வாக்குகளைப் பெற்றார் விஜய். இது எம்.ஜி.ஆர் பெற்ற வாக்குகளை விட அதிகம் என்பது ஊர் அறிந்த உண்மை. ஆனால், தற்போது நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில், தமிழ்நாட்டில் விஜய்க்கு மேலும் 15% சதவீத செல்வாக்கு உயர்ந்துள்ளதாக அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால், அடுத்து நடைபெறும் 2031 தேர்தலில் விஜய் சுமார் 50% சதவீத வாக்குகளைப் பெறக்கூடும் என்ற கணிப்பு அதிகரித்துள்ளது.
அப்படி நடந்தால், இதுவரை தமிழகம் காணாத புதிய வரலாறு ஒன்று எழுதப்படும். அதாவது, தமிழக சட்டமன்றத்தில் டிவிகே (TVK) கட்சி சுமார் 200 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது. அதேநேரம் அதிமுக வெறும் 3 இடங்களையும், திமுக 25 முதல் 27 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்ற நிலையும் தோன்றக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம் கடந்த 25 நாட்களில் விஜய் அரசு நடைமுறைப்படுத்தி வரும் அதிரடிச் செயல்கள்தான். இந்தத் திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
குறிப்பாக, விஜய் ஒரு கிறிஸ்தவர் என்பதால் ஆரம்பத்தில் ஒருசில தரப்பினர் அவரைப் புறக்கணித்தார்கள். ஆனால், தற்போது தமிழக இந்து சமய அறநிலையத்துறை நடைமுறைப்படுத்தும் சிறப்பான செயல்களைப் பார்த்து, பல இந்துக்கள் விஜய் பக்கம் சாய்ந்துள்ளார்கள். அரசாங்க ஊழியர்கள், போலீசார், பொதுப்பணித்துறை மற்றும் மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் விஜய் அரசைப் பாராட்டி வரும் நிலையில், இந்த ஆட்சி நீடித்தால் தமிழ்நாடு அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிடும் என்பது நிச்சயம்.
தமிழ்நாட்டை ஒரு ‘குட்டி சிங்கப்பூர்’ போல மாற்ற வேண்டும் என்பதே விஜயின் கனவு என்பது அண்மையில் தெளிவாகத் தெரியவந்துள்ளது. அரசு ஒப்பந்தக்காரர்களோடு அதிகாரிகள் பேசும்போது தெரிவித்த கருத்துக்கள் இதனையே பிரதிபலிக்கின்றன. தமிழ்நாட்டைச் சிங்கப்பூர் போல மாற்றும் விஜயின் கனவை நனவாக்க, தாம் முழுமையாக உழைக்கத் தயார் என்று பல அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இதன் மூலம் தமிழ்நாடு பெரும் பொருளாதார வளர்ச்சியை அடைய உள்ளது. அத்தோடு, விஜய் அவர்கள் திமுக போல மத்திய அரசைப் பகைத்துக் கொள்ளவில்லை.
மாறாக, மத்திய அரசுடன் ஒரு இணக்கமான மற்றும் வித்தியாசமான போக்கைக் கடைப்பிடிக்கிறார். இதனால் மத்திய அரசின் திட்டங்களும் உதவிகளும் தமிழகத்திற்கு இனி தாராளமாகக் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அந்த வகையில் வைத்துப் பார்த்தால், இந்த குறுகிய நாட்களிலேயே விஜய் அரசு பெரும் சாதனைகளைச் செய்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும். விரைவில் வரவுள்ள திருச்சி கிழக்கு மற்றும் மேலும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளில் இதற்கான வெளிப்பாடு அப்பட்டமாகத் தெரிந்துவிடும்




