செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யம் ஈரானில் இருக்க வேண்​டும்: உச்ச தலை​வர் மோஜ்தபா கமேனி உறுதி

 

அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனி​யத்தை ஒப்படைக்க வேண்டும் என்று ஈரானை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதற்கு ஈரான் மறுத்த​தால் அந்​நாட்​டின் மீது அமெரிக்க – இஸ்​ரேலிய படைகள் தாக்​குதல் நடத்​தின.

இந்​நிலை​யில் போரை நிறுத்த பாகிஸ்​தான் செய்த மத்தியஸ்தம் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கப்பல் போக்​கு​வரத்து நடை​பெறாமல் முடங்​கி​யுள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய் விலை அதி​கரித்து வரு​கிறது. இந்​நிலை​யில் செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யம் ஈரானில்​தான் இருக்க வேண்​டும். அப்​போது​ தான் எதிர்​காலத்​தில் ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் தாக்​குதல் நடத்​தாது என உச்ச தலை​வர் மோஜ்தபா கமேனி உத்​தர​விட்​டுள்​ள​தாக கூறப்படுகிறது.

இதனால் அமைதிப் பேச்​சு​வார்த்தை மேலும் சிக்​கலாகும் எனத் தெரி​கிறது. இது குறித்து அமெரிக்​கா​ இன்​னும் கருத்து தெரிவிக்கவில்​லை. செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யம் ஈரானை விட்டு அகற்​றப்பட வேண்​டும் என்​பது அமெரிக்​கா​வின் முக்​கிய கோரிக்கை. இதை ஈரான் உச்ச தலை​வர் மோஜ்தபா கமேனி நிராகரித்​துள்​ள​தாக வெளி​யான தகவல் மீண்​டும் போர்​ பதற்றத்தை ஏற்​படுத்​தும் எனத் தெரிகிறது.