பாரதிராஜாவை அடக்கம் செய்ததும் மழை பெய்தது, அது ஏன் தெரியுமா? வைரமுத்து சொன்ன காரணத்தை கேட்டு ரசிகர்கள் கண்ணீர்

 

இயக்குநர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு குறித்து உருக்கமாக ட்வீட் போட்டிருக்கிறார் வைரமுத்து. அந்த ட்வீட்டில் மண்வாசனை குறித்து அவர் தெரிவித்ததை பார்த்த ரசிகர்கள் கண் கலங்கிவிட்டார்கள்.

நண்பன் பாரதிராஜாவின் உடலை நல்லடக்கம் செய்ததும் மழை பெய்தது என்றும், அது ஏன் என்றும் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார் வைரமுத்து.

​இயக்குநர் இமயம் பாரதிராஜா ஜூன் 10ம் தேதி அதிகாலை நீலாங்கரை வீட்டில் உயிர் இழந்தார். இதையடுத்து அவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னையிலும், சொந்த ஊரிலும் பாரதிராஜாவின் உடலுக்கு பிரபலங்கள், பொது மக்கள் என பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் நண்பர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு குறித்து ட்வீட் செய்திருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

எக்ஸ் தளத்தில் வைரமுத்து கூறியிருப்பாதவது, பிறந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட்டார் பாரதிராஜா. 83 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களுக்கு கிடைத்த புதையலை குழிதோண்டி புதைத்துவிட்டோம் என்று வேதனைப்பட்டிருக்கிறார். கண்ணாடிப்பெட்டிக்குள் இருந்த பாரதிராஜாவின் உடலை பார்த்து கண்ணீர்விட்டு ஒப்பாரியில் தாலாட்டு பாடியே தங்களின் மகனை தூங்க வைத்துவிட்டார்கள் தாய்மார்கள் என தெரிவித்துள்ளார்.