இலங்கையில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவல் மற்றும் பாதிப்பு மிக தீவிரமாக உள்ளது. ஜனவரி மாதம் முதல் இதுவரை 44,000 பேருக்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு அந்நாட்டில் ஐந்து குழந்தைகள் உட்பட 28 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஆணையின் சுகாதார ற்றத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.இதனால் அங்குள்ள அரசு மருத்துவமனைகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன.
இலங்கை தலைநகரமான கொழும்புவில் மட்டுமே அதிகபட்சமாக சுமார் 11,000 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கொழும்பு தவிர்த்து கம்பஹா, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, காலி, கண்டி, அம்பாந்தோட்டை, கேகாலை மற்றும் குருநாகல் உள்ளிட்ட நகரங்களிலும் டெங்கு பரவல் அதிகரித்து காணப்படுகிறது.
முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு இலங்கையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதே மிக மோசமான பதிவாக இருந்தது. தற்போதைய பரவல் வேகத்தை பார்த்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் 2010-ஆண்டு பதிவான டெங்கு பரவலின் மோசமான நிலையை மீண்டும் எட்ட கூடும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.




