அமெரிக்க பாஸ்போர்ட்டில் டிரம்ப் படம்

 

அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 250 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் புதிய பாஸ்போர்ட் விரைவில் வெளியிடப்படும் என அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்து இருந்தார். அதன்படி தமது போட்டோவுடன் கூடிய பிரத்யேகமான பாஸ்போர்ட்டை வெளியிட்டு உள்ளார்.

இந்த விவரத்தை அவர் தமது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த பாஸ்போர்ட்டில், டிரம்ப் தனது மேசையில் சாய்ந்து கடுமையான முகபாவனை நிற்கும் புகைப்படம், அவரது கையொப்பம் மற்றும் சுதந்திர அறிவிப்பின் உரை பின்னணியில் இடம்பெற்றுள்ளது.

இந்த படம், வெள்ளை மாளிகை புகைப்படக் கலைஞர் டேனியல் டோரோக் எடுத்த புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டதாக கூறப்படுகிறது.இந்த பாஸ்போர்ட், வாஷிங்டனில் நேரடியாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அமெரிக்க வெளிவிவகாரத் துறை அறிவித்தது. அமெரிக்க வரலாற்றில், ஒரு அதிபரின் படம் நேரடியாக பாஸ்போர்ட்டி இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.