அமெரிக்காவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் ஜூன் 15 அன்று முடிவுக்கு வந்ததாக ஈரான் ஜூன் 16 அன்று அறிவித்தது.
மேலும், லெபனான் மண்ணில் இஸ்ரேலின் எந்தவொரு தாக்குதலும் மற்றும் அதன் துருப்புக்களின் பிரசன்னமும் அந்த ஒப்பந்தத்தின் மீறலாகும் என்றும் அது மீண்டும் வலியுறுத்தியது.
அனைத்து முனைகளிலும் போர் நேற்று காலை(15.06.2026) அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது,” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியதாக, ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், லெபனான் மீதான எந்தவொரு இஸ்ரேலியத் தாக்குதலும், எட்டப்பட்ட புரிந்துணர்வுகளின் மீறலாகும் என்று அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
லெபனானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது ஒரு பிரிக்க முடியாத பகுதியாகும் என்று அவர் கூறியதாக ஈரானிய ஊடங்கள் கூறியள்ளன.
இஸ்ரேல் தான் ஆக்கிரமித்துள்ள லெபனான் பிரதேசங்களிலிருந்து வெளியேறும் வரை போர் முடிவுக்கு வராது என அவர் மீண்டும் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இறுதி உடன்படிக்கையை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு, ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமெரிக்காவுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் ஈரான் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
மூன்று மாத கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, முதல் கட்டத்தை எங்களால் முடிக்க முடிந்தது, என அராக்சி தெரிவித்தார்.
இந்த பூர்வாங்க ஒப்பந்தம், ஏப்ரல் 8 முதல் அமலில் உள்ள போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பதோடு, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான எதிர்காலப் பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு பேச்சுவார்த்தைக் கட்டமைப்பையும் அமைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




