விளைவுகள் மோசமாக இருக்கும் – அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா

இனிமேல் இதை செய்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் – அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா
“இனிமேல் இதைச் செய்யாதீர்கள்; இல்லையெனில் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்” என்று அமெரிக்காவுக்கு, ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கான காரணம் என்ன? ஏன் ரஷ்யா இவ்வளவு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது? என்ற கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்.

அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட 32 ஐரோப்பிய நாடுகள் இணைந்துள்ள ராணுவக் கூட்டணியே நேட்டோ ஆகும். இந்த அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் பின்னணியில்தான், 2022ஆம் ஆண்டு முதல் உக்ரைன் மீது ரஷ்யா போரை நடத்தி வருகிறது.

இந்தப் போரைத் தொடர்ந்து நடத்துவதற்கான ரஷ்யாவின் முக்கிய நிதி ஆதாரம் அந்நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியே ஆகும். இதனால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா

திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்து காயமடைந்த மூதாட்டி ஐ.சி.யுவில் அனுமதி’
இதுமட்டுமல்லாமல், ரஷ்யாவின் பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தும் வகையில் 21வது தடைகள் தொகுப்புக்கு ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்தத் தடைகளின் கீழ், ரஷ்யாவின் ‘நிழல் கடற்படை’ மீது கட்டுப்பாடுகள் விதித்தல், கச்சா எண்ணெய் விலைக்கு உச்சவரம்பு நிர்ணயித்தல், ராணுவ ஆயுதங்கள் தயாரிக்க தேவையான பொருட்களை ஐரோப்பாவிலிருந்து ரஷ்யா இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடேசா நகரின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த பதற்றமான சூழ்நிலையில், பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, “உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவதை ரஷ்யா எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாது” என்று ரஷ்யா தரப்பில் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த எச்சரிக்கையையும் மீறி அமெரிக்கா உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்குமா? அப்படி வழங்கினால் ரஷ்யாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்ற கேள்விகள் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், இந்த மோதல்களால் இறுதியில் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள் தான் என்பதே மறுக்க முடியாத கசப்பான உண்மையாகும்.