நாகர்கோவிலை சார்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சிறையில் உயிரிழந்த விவகாரத்தில், அவரின் உடல் நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த உடற்கூராய்வு அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்று இருப்பது பெரும் பரபரப்பினை கிளப்பியுள்ளது.
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குட்கா வைத்திருப்பதாக சிறையில் அடைக்கப்பட்ட அவரை காவல்துறையினர் அடித்தே கொன்று விட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது சம்பந்தமாக அரசியல் கட்சிகளும் விமர்சனங்களையும், கண்டனங்களையும் தொடர்ச்சியாக பதிவு செய்து வந்தன.
இநிலையில் நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரிவர்மனின் உடல் நீதிபதி முன்னிலையில் நடந்த உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதில் அவருடைய உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பதாக உடற்கூராய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து சபரிவர்மன் சிறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவலவர்கள் கைது செய்யப்படும் வரை உடலை பெற மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய சபரிவர்மனின் உறவினர்கள், ரிப்போர்ட்டில் 19 இடங்களில் காயம் ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவருடைய குறைபாடு கொண்ட வலது கையில் 3 இடங்களில் உடைத்துள்ளதாகவும் ரிப்போர்ட் கொடுத்து இருக்காங்க. வலது நெஞ்சு. தலை, வலது கால் மற்றும் இடது காலையும் உடைத்துள்ளனர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ரிப்போர்ட் எல்லாத்தையும் போடுங்க.
இனிமேல் யாருக்கும் இப்படி நடக்கக்கூடாது என்று வேதனையுடன் பேசியுள்ளனர். அதோடு இனிமேல் யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதுன்னு சொல்லி தான் ஊர் மக்கள் நாங்கள் எல்லாரும் போராடுறோம் என்றார் ஒருவர். அதன்பின்னர் சபரிவர்மனின் சகோதரி பேசுகையில் என் தம்பியை கொலை பண்ணவங்களை அரெஸ்ட் பண்ணனும். அது வரைக்கும் உடலை வாங்க மாட்டேன் என வேதனையுடன் பேசினார்.
மேலும் என் அப்பா பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார். நாங்க எல்லாரும் இங்க போராடிட்டு இருக்கும் போது, கிராம அலுவலர் சொல்லி எங்கப்பா கிட்ட போய் உடலை வாங்கிக்க சொல்லி கையெழுத்து கேட்டு இருக்கார் என்று பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தவெக ஆட்சியில் பெரிய அராஜகம் நடக்குது. எங்களை காப்பாத்துங்க எனவும் ஆவேசமாக உயிரிழந்தவரின் சகோதரி பேசியுள்ளார்.
தொடர்ந்து மற்றொருவர் பேசும்போது, உடற்கூராய்வு முடிந்ததும் உடலை வாங்க சொல்லி கட்டாயப்படுத்துறாங்க. சட்டரீதியான அணுகுமுறை இல்லை. குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் தான் அனைத்தும் நடக்கிறது. வெகு விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். உறவினர்கள் பகிர்ந்துள்ள இந்த தகவல்கள் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள உடற்கூராய்வு அறிக்கை பலரின் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இதற்கிடையில் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக திமுகவை சார்ந்த பரந்தாமன் இன்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் இச்சம்பவம் தொடர்பாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். உடல் பரிசோதனைக்கு பின்பாக சிறையில் அடைக்கப்பட்ட சபரிநாதன், இரண்டே நாட்களில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பார் என்ற கேள்வியை முன்வைத்தார். அதோடு தவெக அரசு மற்றும் முதல்வர் ஜோசப் விஜய் மீது கடுமையாக விமர்சனம் செய்து அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.



