லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் பொருட்களுக்கான சிறப்பு சலுகைகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகி துபாய் மக்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது எத்தனை நாட்களுக்கு நடைபெறுகிறது, எந்தெந்த மால்களில் உள்ள ஹைப்பர் மார்க்கெட்களில் சலுகைகளை பெறலாம் போன்ற தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
லுலு மாலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஷாப்பிங் முதல் பொழுதுபோக்கு அம்சங்கள் வரை, விதவிதமான உணவு வகைகள் முதல் பியூட்டி பொருட்கள் வரை ஏராளமான அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. இந்தியாவில் லுலு மால்கள், லுலு ஹைப்பர் மார்க்கெட்கள், லுலு பேஷன் ஸ்டோர், லுலு அப்பேரல்ஸ், லுலு கனெக்ட், லுலு செலிபிரேட், லுலு டெய்லி, ஃபன்சுரா என லுலு குழுமத்தின் கிளைகள் ஒவ்வொரு நாளும் மக்களை ஈர்த்து வருகின்றன.
இதன் உரிமையாளர் எம்.ஏ.யூசுப் அலி கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் தலைமை அலுவலகம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தான் உள்ளது. எனவே இதன்கீழ் வரும் 7 உறுப்பு நாடுகளிலும் ஏராளமான கிளைகளை விரிவுபடுத்தி வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள லுலு குழுமங்களில் மிட் நைட் சேல் என்ற பெயரில் நள்ளிரவு நேரத்தில் மிகப்பெரிய சலுகைகளை வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மொகரம் பண்டிகையை ஒட்டி முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல் அய்ன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்களில் 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இது இன்று (ஜூன் 26) இரவு 11.30 மணிக்கு தொடங்கி ஜூன் 27 அதிகாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மக்கள் ஷாப்பிங் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். எந்தெந்த இடங்களில் உள்ள ஹைப்பர் மார்க்கெட்கள் என்ற கேள்விக்கும் தெளிவாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் உள்ள மேடினாட் ஸாயத்,
கேபிடல் மால்,
அல் வஹ்தா மால்,
கயாதி மால்,
அல் தாஃப்ரா மால்,
அல் தன்னா மால் ஆகியவற்றிலும்,
துபாயில் உள்ள அல் குவாசைஸ்,
அல் பார்ஷா, முஹைஸ்னா,
அல் கராமா ஆகிய மால்களிலும்,
அல் அய்னில் உள்ள குவைதாத்,
சனையா,
அல் ஃபோஹா,
அல் பலாஹ் ஆகிய மால்களிலும்,
ஷார்ஹாவில் உள்ள முவெய்லாஹ்,
பு டினா,
அல் நஹ்தா ஆகிய மால்களிலும் 70 சதவீத மிட் நைட் சலுகை வழங்கப்படுகிறது.
இதுதவிர அஜ்மன்னில் உள்ள லிவாரா,
புஜைரா,
உம் அல் குவைன்,
ராஸ் அல் கைமா ஆகிய பகுதிகளில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்களிலும் நள்ளிரவு நேரத்தில் ஷாப்பிங் செய்து பெரிய அளவில் தள்ளுபடி சலுகையை பெற முடியும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுமார் 6 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஐடி, நிதி, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் வேலை செய்கின்றனர். குறிப்பாக துபாயில் தான் அதிகபட்ச தமிழர்கள் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட இடங்களில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மிட் நைட் ஆஃபர் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லுலு வர்த்தகத்தின் வருவாய் விவரங்கள் குறித்து சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன்படி, 2025-26 நிதியாண்டில் 7.9 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 74,772 கோடி ரூபாய் என்பது கவனிக்கத்தக்கது. இந்த சூழலில் GCC எனப்படும் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய வளைகுடா நாடுகளில் வரும் 2028ஆம் ஆண்டிற்கு புதிதாக 50 கடைகளை திறக்க லுலு குழுமம் முடிவு செய்திருக்கிறது



