ரஷ்யாவில் பாரிய பெட்ரோல் தட்டுப்பாடு- வரிசையில் காத்திருக்கும் மக்களுக்காக அவசர நடமாடும் கழிப்பறைகள்

 

ரஷ்யாவில் வரலாறு காணாதளவுக்கு பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் உக்ரைன் இராணுவம் ரஷ்யாவில் உள்ள 50க்கும் மேற்பட்ட பெட்ரோல், டீசல் உற்பத்தி தொழிற்சாலைகளை தாக்கி தகர்த்ததால், அங்கு பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அங்குள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

அந்நாட்டில் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோலை வழங்குவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் மக்களின் அவசரத் தேவைகளுக்காகவே நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது,

ரஷ்யாவில் நாளொன்றுக்கு சுமார் 1,10,000 தொன் பெட்ரோல் தேவைப்படுவதாகவும் அத்தேவையை பூர்த்தி செய்வதற்காக பெலாரஸ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிடமிருந்தும் எரிபொருள் இறக்குமதி செய்ய ரஷ்யா தீர்மானித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.