குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்டகாலமாக இழுபறியாக இருந்த தொகை கைக்கு வரும். சேமிக்கும் எண்ணம் தோன்றும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
ரிஷபம்: விலகியிருந்த உறவினர்கள், நண்பர்கள் ஓடிவந்து பேசுவார்கள். கணவன் – மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள்.
மிதுனம்: நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். வெளியூர் பயணத்தால் அலைச்சல் இருந்தாலும் நன்மை உண்டு.
கடகம்: அரசு காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வேலைக்கு விண்ணப்பித்தவர் களுக்கு நல்ல தகவல் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடு வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை நீங்கும். திடீர் பயணம் உண்டு.
சிம்மம்: வீண் அலைச்சல், காரியத்தடைகள் வரக்கூடும். வெளிவட் டாரத்தில் நிதானமுடன் செயல்படுங்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். ஜாமீன், உத்தரவாதக் கையெழுத்திடுவதை தவிர்த்து விடுங்கள். பயணத்தின்போது கூடுதல் கவனம் தேவை.
கன்னி: எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். குடும்பத் தில் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
துலாம்: பழைய கடன்களைத் தீர்ப்பதற்கு வழி பிறக்கும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். திருமண காரியங்கள் கைகூடி வரும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு தாயார் ஆதரவாக இருப்பார்.
விருச்சிகம்: எடுத்த வேலையை சுறுசுறுப்புடன் முடித்துக் காட்டு வீர்கள். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணத்துக்குத் திட்டமிடுவீர்கள்.
தனுசு: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அக்கம்பக்கத்தினரின் அன்புத்தொல்லை அதிகரிக்கும். இரவு பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது.
மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். கலைப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எடுத்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள்.
மீனம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மற்றவர் களிடம் மனக்குறைகளைச் சொல்லி ஆறுதல் பெறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.


