மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம் 14- ஜூலை -2026

 

மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை மாற்றுவீர்கள். நெடுநாட்களுக்குப் பிறகு சில நண்பர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.

ரிஷபம்: பிரபலங்கள் அறிமுகமாவர். அவர்களின் வீட்டு விசேஷங் களில் கலந்து கொள்வீர்கள். தாயாரின் உடல்நலம் திருப்தி தரும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்க்கவும்.

மிதுனம்: எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். மூத்த சகோதர வகையில் ஆதரவு உண்டு. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கடகம்: அலைந்து திரிந்து சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.

சிம்மம்: புது எண்ணங்கள் மனதில் தோன்றும். குடும்ப உறுப்பினர் களிடம் விவாதம் வேண்டாம். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர்கள். பங்குதாரரின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும். உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: வெளிவட்டாரத்தில் நிதானமாக பழகவும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

துலாம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உடன் பிறந்தவர்கள் பாசமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். பிரபலங்களை சந்திப்பீர். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் ஏற்பீர்.

விருச்சிகம்: கடந்தகால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் பணியாட்கள் நன்றியுடன் இருப்பார்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

தனுசு: சோர்வு, தூக்கமின்மை வரக்கூடும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. தாயார், பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் நிதானமாக செயல்படவும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் போட்டி குறையும். பணியாட்கள் அன்பாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

கும்பம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் அறிமுகம் கிட்டும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். புதிய பங்குதாரர் ஆதரவு தருவார். அலுவலகத்தில் சவாலான பணியை வெற்றிகரமாக முடித்து சாதனை படைப்பீர்.

மீனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் அடுத்தவரைப் பற்றி தலைமையிடத்தில் புகார் கூற வேண்டாம். வியாபாரத்தில் லாபம் கிட்டும்.

பராபவ – ஆனி 30 | திங்கள்கிழமை

திதி: அமாவாசை பிற்பகல் 3.13 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம்: புனர்பூசம் நள்ளிரவு 12.09 வரை. பிறகு பூசம்.

நாமயோகம்: வியாகாதம் காலை 11.56 வரை. பிறகு ஹர்ஷணம்.

நாமகரணம்: நாகவம் பிற்பகல் 3.13 வரை. பிறகு கிம்ஸ்துக்கினம்.

நல்லநேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.

யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

சந்திராஷ்டமம்: மூலம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.49.

அஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 5, 9

பரிகாரம்: பால்

தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை