மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்- 09 -ஜூலை -2026

 

மேஷம்: அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். அவசர முடிவுகளை எடுக்காதீர். உடன் பிறந்தவர்களால் சங்கடங்கள் வரும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். பிரபலங்கள் அறிமுகமாவர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீர்ந்து நிம்மதியுண்டு. வியாபார ரீதியான வெளியூர் பயணம் திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கடகம்: பழைய நினைவுகள் மகிழ்ச்சி தரும். குழப்பம் நீங்கி மனநிம்மதி பிறக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர். வியாபார ரீதியாக உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

சிம்மம்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்த சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் வரும். வருமானத்தை பெருக்க வழி கிடைக்கும். அலுவலகத்தில் மேலதி காரியை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

கன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வெளிவட்டாரத்தில் மறைமுக அவமானம் ஏற்படக் கூடும். பழைய கடன் சுமையால் நிம்மதி இழப்பீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரம் சிறக்கும்.

துலாம்: குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கி கனிவான பேச்சுவார்த்தைகள் இருக்கும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர். பணவரவு திருப்தி தரும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.

விருச்சிகம்: நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் இருந்த கசப்புகள் விலகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். வியாபாரரீதியாக வெளியூர் செல்வீர். பங்குதாரர்கள் ஆதரவு தருவார்கள்.

தனுசு: மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரரீதியாக சில முடிவுகளை எடுப்பீர்கள். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூற வேண்டாம்.

மகரம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினருடன் இருந்த பகை நீங்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

கும்பம்: செலவைக் தவிர்த்து, சேமிக்கத் தொடங்குவீர். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரரீதியாக புதியவர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர். பிள்ளை களை பொறுப்பாக வளர்ப்பீர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

பராபவ – ஆனி 25 | வியாழக்கிழமை

திதி: நவமி காலை 10.38 வரை. பிறகு தசமி.

நட்சத்திரம்: அசுவினி மதியம் 2.56 வரை. பிறகு பரணி.

நாமயோகம்: சுகர்மம் காலை 10.11 வரை. பிறகு திருதி.

நாமகரணம்: கரசை காலை 10.38 வரை. பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9.

யோகம்: அமிர்தயோகம் மதியம் 2.56 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.

சந்திராஷ்டமம்: அஸ்தம் மதியம் 2.56 வரை. பிறகு சித்திரை.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.48.

அஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 9

பரிகாரம்: தைலம்

தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை