மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் -நல்ல நேரம் 21 ஜூன் 2026

 

மேஷம்: மனதில் இருந்த பயம் விலகும். பணவரவு, திருப்தி தரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். பழுதான வாகனம் சீராகும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.

ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர், நண்பர்களால் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிட்டும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி உண்டு. கோபம் குறையும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகள் வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: குடும்பத்தில் ஒருவருக்கொருவர் இருந்த பகை நீங்கி, மகிழ்ச்சி தங்கும். உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பர். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

சிம்மம்: இடம், பொருள் அறிந்து பேசுவது நல்லது. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வாகனத்தில் நிதானம் தேவை. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களால் மன உளைச்சல் ஏற்படும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்புண்டு.

கன்னி: சகோதர வகையில் உதவி கிட்டும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுபடுத்துவீர். அலுவலகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.

துலாம்: எதிர்பாராத பணவரவால் மன மகிழ்ச்சியுண்டு. நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். மேலதிகாரி பாராட்டுவார்.

விருச்சிகம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்குவீர்கள். நட்புவழியில் நற்செய்தி கேட்பீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும்.

தனுசு: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். மனதுக்கு பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். நவீன மின்னணு சாதனம் வாங்குவீர். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர். அலுவலக பணிகளை முடிப்பீர்கள்.

மகரம்: மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சாலைகளை கவனமாக கடந்து செல்லவும். யாருக்கும் எதற்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல் போராடுவீர். வாகனத்தில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. பங்குதாரரின் ஆலோசனையை ஏற்கவும்.

மீனம்: தம்பதிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. பிள்ளைகளின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். சிலர் புது வாகனம் வாங்குவீர். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர். பங்குதாரர் ஆதரிப்பர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

திதி: சப்தமி பிற்பகல் 3.21வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: பூரம் காலை 9.31 வரை. பிறகு உத்திரம்.

நாமயோகம்: சித்தி காலை 11.20 வரை. பிறகு வியாதீபாதம்.

நாமகரணம்: வணிசை பிற்பகல் 3.21 வரை. பிறகு விஷ்டி.

நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.

யோகம்: சித்தயோகம் காலை 9.31 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

சந்திராஷ்டமம்: அவிட்டம் காலை 9.31 வரை. பிறகு சதயம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43.

அஸ்தமனம்: மாலை 6.37.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: பிற்பகல் 3.00-4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4

பரிகாரம்: வெல்லம்

தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை