மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மகன் ஆடு மேச்சது தெரியுமா?

 

இன்று பிறந்தநாள் கொண்டாடும் மோகன்லால் மகன் பிரணவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். இந்நிலையில் பிரணவ் ஆடு மேய்த்த கதையை தெரிந்து கொள்ளுங்கள்.

மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின் மகன் பிரணவ் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தான் ஒரு பெரிய ஸ்டாரின் மகனாக இருந்தாலும் அந்த பந்தா கொஞ்சம் கூட இல்லாதவர் பிரணவ். அப்பா பெயரை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைக்காத மகன் அவர்

குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த பிரணவ் மோகன்லால் வளர்ந்த பிறகு பயணம் செய்வதில் மகிழ்ச்சி கண்டார். மோகன்லாலிடம் பணம் வாங்கி உலகை சுற்றிப் பார்க்க அவர் விரும்பவில்லை. அதனால் கமல் ஹாசன், கௌதமியை வைத்து ஜீத்து ஜோசப் இயக்கிய பாபநாசம் படத்தில் உதவி இயக்குநராக தன் கெரியரை துவங்கினார்.

மோகன்லால் மகன் என்பதால் தங்களுடன் வந்து சாப்பிடுமாறு கமல் அழைத்திருக்கிறார். அதற்கு பிரணவோ நான் ஒரு உதவி இயக்குநர் சாரே, அதனால் பிற உதவி இயக்குநர்களுடன் சேர்ந்து சாப்பிடவே விரும்புகிறேன் என்று கூறிவிட்டார். அது மட்டும் அல்ல சக உதவி இயக்குநர்களுடன் தான் தங்கவும் செய்தார். அவரின் இந்த எளிமை தான் அனைவருக்கும் பிடித்திருக்கிறது.

ஆடு மேய்த்தார்: 2024ம் ஆண்டு ஸ்பெயினை சுற்றிப் பார்க்க கிளம்பிணார் பிரணவ். அங்கு அவர் 5 ஸ்டார் அல்லது 7 ஸ்டார் ஹோட்டலில் தங்கவில்லை. மாறாக உணவு, இருப்பிடத்திற்காக ஒருவரின் பண்ணையில் ஆடு மேய்த்திருக்கிறார். அதாவது சம்பளத்திற்கு பதில் அந்த பண்ணையில் தங்கிக் கொண்டு, முதலாளி கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிடலாம். பிரணவ் நினைத்தால் பெரிய ஹோட்டலில் தங்கி விலை உயர்ந்த காரில் ஸ்பெயினே திரும்பிப் பார்க்கும்படி ஊர் சுற்றியிருக்கலாம். ஆனால் அவரோ எளிமையாக சுற்றி பார்த்திருக்கிறார்.

உலகம் சுற்றி வந்தால் நிறைய கற்றுக் கொள்ளலாம் என நினைக்கிறார் பிரணவ். அதனால் கை நிறைய படங்கள் வைத்து நடிப்பது அவர் ஸ்டைல் கிடையாது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் தான் நடிக்கிறார். ஆனால் பிரணவ் மோகன்லால் படம் ரிலீஸானால் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டர்களுக்கு சென்று அவரின் நடிப்பை பாராட்டுகிறார்கள்.

அம்மா ஆசை: மகனுக்காக கதை கேட்கிறார் சுசித்ரா மோகன்லால். ஆனாலும் இறுதி முடிவு என்னவோ பிரணவ் உடையது தான். மகனே, வருஷத்துக்கு இரண்டு படம் நடிக்கக் கூடாதா என்று அம்மா கேட்டிருக்கிறார். இல்லம்மா, முடியாது என்று கூறியிருக்கிறார் மோகன்லால் வாரிசு.

வேலை வேலை என்று ஓடும் உலகில் மனதிற்கு பிடித்ததை செய்து கொண்டு வேலை செய்யும் பாக்கியசாலியாக இருக்கிறார் அவர். பயணம் செய்யும்போது விலை உயர்ந்த உடைகள் எல்லாம் கிடையாது. சாதாரண உடை, ஒரேயொரு பையுடன் கிளம்புகிறார். சாலையோர கடைகளில் மக்களோடு மக்களாக சாப்பிடுகிறார்.

வித்தியாசமான வாரிசு: ஸ்டார் வாரிசுகளில் ரொம்பவே வித்தியாசமானவர் பிரணவ் மோகன்லால். மகனுக்கு பிடித்த மாதிரியே வாழட்டும் என்று விட்டுவிட்டார் மோகன்லால். பிரணவ் நடிப்பில் கடைசியாக வெளியான Diளூs Iraளூ படம் சூப்பர் ஹிட்டானது.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
பிரணவை வீட்டில் அப்பு என்று தான் அழைப்பார்கள். அப்புவுக்கு மோகன்லால், தங்கை விஸ்மயா என ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மோகன்லாலின் நண்பர் மம்மூட்டி வீட்டில் பிரணவை தங்கள் பிள்ளைகளில் ஒருவராகவே பார்க்கிறார்கள். சிறு வயதில் மம்மூட்டில் வீட்டில் பிரணவை அவர் கையில் கம்புடன் துரத்தியதை பார்த்த இயக்குநர் மணிரத்னம் வியந்து போனார் என்று சுஹாசினி ஒரு முறை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.