எம்மில் சிலருக்கு பார்வையில் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கும். குறிப்பாக கண்ணில் தென்படும் பொருட்கள் இரண்டாக தெரியும் ஒரு நிலை . இத்தகைய பாதிப்பு இருந்தால் …ரத்த சர்க்கரையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று அவதானித்து, அதற்கான சிகிச்சையை மேற்கொள்வார்கள். இந்நிலையில் இத்தகைய அறிகுறியுடன் தலைவலையும் ஏற்பட்டால்… அவை பிட்யூற்றரி சுரப்பியில் ஏற்பட்டிருக்கும் கட்டி பாதிப்பாகவும் இருக்கலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
தலைவலி, பார்வைத் திறன் குறைபாடு, முகத்தில் உணர்வில்லாத நிலை ஏற்படுதல், வலியை உணர்தல் , குறிப்பாக கண் இமைகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பது, வலிப்பு உருவாவது… ஆகியவை அறிகுறிகளாக வெளிப்பட்டால், உங்களுடைய பிட்யூற்றரி சுரப்பியில் கட்டி பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என அவதானிக்க வேண்டும்.
எம்முடைய மூளையின் அடிப்பகுதியில் சிறிய அளவில் அமைந்துள்ள சுரப்பி தான் பிட்யூற்றரி சுரப்பி .இது உடலில் ஹோர்மோன்களை உற்பத்தி செய்வதுடன் உடலின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தி சீராக்குகிறது. சிலருக்கு இப்பகுதியில் திடீரென்று அசாதாரணமான வளர்ச்சி ஏற்படும். இவை பிட்டியூற்றரி கட்டி பாதிப்பாக உருவாகிறது. இத்தகைய கட்டி பெரும்பாலும் துங்கற்றவை என்றாலும் ..சில புற்றுநோயாக மாறக்கூடிய நிலையும் உண்டு.
இத்தகைய அறிகுறி உள்ளவர்களை வைத்தியர்கள் பிட்யற்றரி கட்டி மற்றும் கிரானியோஃபாரிங்கியோமா எனக் கட்டியின் அருகில் இருப்பவற்றையும் ஒப்பீடு செய்து பாதிப்பின் தன்மையை துல்லியத்தை அவதானிப்பார்கள். இதனுடன் குருதி பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை மூளை பகுதி, எம் ஆர் ஐ ஸ்கேன் ,சிடி ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பினை துல்லியமாக கண்டறிவர். அதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கண்டதை பற்றிய பிரத்தியேக கண்டறியப்பட்ட பிரத்தியேக மருந்தியல் சிகிச்சையை அழித்து நிவாரணம் தருவர் வேறு சிலருக்கு பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.




