கூலி வேலை செய்து..ரூ.7 சம்பாதித்த இளையராஜா! அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இசைஞானி இளையராஜாவிற்கு 83 வயது ஆகிரது. இவர் கூலி வேலை பார்த்தது குறித்தும், அப்போது தனக்கு கிடைத்த மகிழ்ச்சி, இப்போது கிடைக்காதது குறித்தும் ஒரு நேர்காணலில் சமீபத்தில் பேசியிருந்தார். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Ilayarajaa Net Worth : தமிழ் திரையுலகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய இசையுலகில் எத்தனை ஆண்டுகளானாலும், எத்தனை மெட்டுகளை போட்டாலும் என்றென்றும் யாருக்கும் சலித்துப்போகாத இசை மேதையாக இருப்பவர், இளையராஜா. இவருக்கு ஜூன் 3ஆம் தேதி பிறந்தநாள். ஆனால், கலைஞருக்கும் அதே நாளில் பிறந்தநாள் என்பதால், ஒரு நாள் முன்னதாகவே தனது பிறந்தநாளை இவர் கொண்டாடுகிறார்.

1976ல் வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இளையராஜா, பாமர மக்களையும் தனது மெல்லிசையால் கவர்ந்தவர். இதனால்தான், ஆண்டுகள் 50 ஆகியும், ஆயிரம் அனிருத்தும் சாய் அபயங்கரும் வந்தாலும் இன்னும் நிலைத்து நிற்கும் இசையமைப்பாளராக இருக்கிறார்.

இளையராஜா தேனி மாவட்ட பண்ணைப்புரத்தில் பிறந்தார். இளம் வயதில் படிப்பின் மீது ஆர்வம் இருந்தாலும், குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக இவர் பள்ளிப்படிப்பை தொடரவில்லை. எட்டாம் வகுப்பு முடிந்து ஒன்பதாம் வகுப்பில் சேர, ரூ.25 கொடுக்க வேண்டும் என்பதால், அந்த தொகையை கூட வீட்டில் வாங்க மனமில்லாமல் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை இளையராஜாவிற்கு ஏற்பட்டுள்ளது.

இளையராஜா சிறு வயதில் இருந்த காலத்தில், வைகை அணை கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அங்கு, இளையராஜா தண்ணீர் பாய்ச்சும் வேலையில் சேர்ந்தார். அப்படி அவர் வேலை செய்தாலும், அவர் மனம் முழுக்க இருந்தது,இசை இசை இசை மட்டும்தான்.

வேலை பார்க்க்கும் போது பாடிக்கொண்டே தண்ணீர் பாய்ச்சும் இளையராஜாவை அவரது பொறியாளர் எஸ்.கே.நாயர் கவனித்துள்ளார். பின்னர், அலுவலகத்தில் ஒரு வேலை போட்டு கொடுத்திருக்கிறார்.

அந்த வேலையில் சேர்ந்த பின்பு, இளையராஜாவிற்கு சம்பளம் கிடைத்துள்ளது. அது எவ்வளவு தெரியும? வெறும் ஏழு ரூபாய்தான். இது மிகவும் குறைவான சம்பளமாக இருந்தாலும், இதை கையில் வாங்கும் போது தனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததாக இளையராஜா ஒரு முறை கூறியிருந்தார்.

இது குறித்து ஒரு மேடையில் பேசிய அவர், “புத்தம் புதிதாக ஏழு ரூபாய் நோட்டை கையில் வாங்கிய போது, நான் வானத்தில் பறப்பது போல இருந்தது. அந்த மனநிறைவும் சந்தோஷமும், பரவசமும் அதற்கு பிறகு என் வாழ்க்கையில் நான் சம்பாதிக்கவே இல்லை” என்று கூறியிருந்தார்.

இளையராஜாவிற்கு கிட்டத்தட்ட சுமார் 795-800 கோடி வரை சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. படங்களுக்கு ஓரளவு கணிசமாக வாங்கினாலும், இவரது இசை லேபில்கள், லைவ் சிம்பனி, கண்டிப்பான காப்பி ரைட்ஸ் போன்றவையும் இவரது சொத்துகளாக இருப்பதாக கூறப்படுகிறது.

சொந்தமாக வீடு, ஆபிஸ், பல கார்கள் என அத்தனையும் வைத்துள்ள இவர், யூடியூபில் தன் பாடல்கல் மூலமாக மட்டும் சுமார் 34 லட்சம் வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
சம்பளம்:

இளையராஜா திரையுலகிற்கு வந்த போது அவரது சம்பளங்கள் சில ஆயிரமாகவே இருந்தன. சொல்லப்போனால், இவர் தனது 100வது படத்துக்கு இசையமைத்து விட்டுதான் ரூ.1 லட்சம் சம்பளமே அவருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.

மேற்கூறிய அதே பேட்டியில் இளையராஜா இன்னொரு விஷயத்தையும் கூறினார், அதாவது ஏழு ரூபாய் சம்பாதித்த போது கிடைத்த மகிழ்ச்சி, ஏழு கோடி சம்பாதித்த போதும் கிடைக்கவில்லை என்றிருந்தார்.