ஐரோப்பாவில் வெப்ப அலை: 3,700 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

 

ஜூன் மாத இறுதியில் ஐரோப்பாவில் வீசிய கடுமையான வெப்ப அலை காரணமாக பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் 3,700 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

காலநிலை மாற்றமே இந்த அதீத வெப்பநிலைக்கு முக்கியக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் மட்டும் 2,025 கூடுதல் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் 22–28 காலகட்டத்தில் வீடுகளில் நிகழ்ந்த இறப்புகள் 91 வீதம் அதிகரித்துள்ளன.

பெல்ஜியத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,200 கூடுதல் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

நெதர்லாந்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டு 480 இற்கும் மேற்ப்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன