எம்பீமா எனும் நுரையீரல் சத்திர சிகிச்சை

 

எம்மில் சிலருக்கு குளிர் காய்ச்சலுடன் மூச்சு விடுவதில் சிரமத்தையும் எதிர்கொள்ளும் போது ..உடனடியாக அருகில் உள்ள வைத்திய சாலையில் நிவாரண சிகிச்சையை பெறுவார்கள். இத்தகைய தருணத்தில் வைத்தியர்கள் நோயாளிகளிடம் உங்களுக்கு மருத்துவ மொழியில் எம்பீமா என குறிப்பிடப்படும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக விவரிப்பார்கள்.

எம்பீமா என்றால் நுரையீரல் மற்றும் மார்பு சுவர்களுக்கு இடையே உள்ள சவ்வு பகுதியில் சீழ் உருவாகி தேக்கமடைந்து, அதனை கடினமாக்குவதால்.. சுவாசிப்பதில் கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதன் போது இயல்பான அளவை விட நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மை கடுமையாக பாதிக்கப்படுகிறது.

நெஞ்சு வலி, இருமல், காய்ச்சல், சளி , மூச்சுத் திணறல், சோர்வு ஆகிய அறிகுறிகள் இருந்தால்… உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனையை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து அதற்குரிய சிகிச்சையை முறையாகவும் முழுமையாகவும் பெற வேண்டும்.

இந்தத் தருணத்தில் எக்ஸ் ரே, சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் மற்றும் தொராசென்டசிஸ் ஆகிய சில பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இந்த பரிசோதனை முடிவுகளில் அடிப்படையில் உங்களுக்கு பிரத்யேகக மருந்தியல் சிகிச்சை மற்றும் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட டீகார்ட்டிகேசன் எனும் பிரத்யேக சத்திர சிகிச்சை ஆகியவற்றை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.

பொதுவாக பாக்டீரியா தொற்று காரணமாக எம்பீமா பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய சத்திர சிகிச்சைக்குப் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறைகளையும் உணவு முறைகளையும் தொடர்ச்சியாக பின்பற்றினால் மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள இயலும்.