அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (US CENTCOM) புதன்கிழமை (08) ஈரான் மீது சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தியதாகக் கூறுகிறது.
வெளிநாட்டு ஊடகங்களின்படி, செவ்வாய்க்கிழமை (07) ஹோர்முஸ் நீரிணை மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.
சிரிக்கில் (Sirik) உள்ள ஒரு படகுத்துறையில் ஆறு எறிகணைகள் விழுந்ததாகவும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்களுக்கு முன்னதாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த எண்ணெய் தடைகளை தற்காலிகமாக நீக்கும் விலக்கை அமெரிக்க கருவூலம் ரத்து செய்திருந்தது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.
கப்பல்கள் மீதான இத்தாக்குதல்களைக் கண்டித்துள்ள கட்டார் மற்றும் சவூதி அரேபியா, தங்களுக்குச் சொந்தமான கப்பல்களும் சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.



