இத்தாலியின் போலோக்னாவில் (Bologna) கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.07.2026) நடைபெற்ற காவல்துறை நடவடிக்கையின்போது, மொராக்கோவைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தாலியில் வசித்துவந்த அவர், சிறிய துப்புரவு நிறுவனமொன்றை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
“ஒருவர் குழப்பம் ஏற்படுத்துகிறார்” என்ற அவசர அழைப்பை அடுத்து அந்த இடத்துக்கு வந்த காவல்துறையினருடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் அவர்மீது பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்தி, தரையில் தள்ளி கைவிலங்கிட்டு பல நிமிடங்கள் அழுத்திப் பிடித்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளியில், அவர் “உதவிஸ உதவிஸ” என்றும், “போதும்ஸ போதும்ஸ” என்றும் பலமுறை குரல் எழுப்புவது பதிவாகியுள்ளது. அவர் உயிரிழந்ததையடுத்து போலோக்னாவில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு, இது “அரசின் கொலை” (“assassinio di stato”) எனக் குற்றஞ்சாட்டி காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிவருகின்றனர்.
25. Mai 2020இல் அமெரிக்காவில் இடம்பெற்ற ஒரு கறுப்பினத்தவரின் மரணத்துக்கு ஒப்பானதுதான் இதுவும். ஆனால் “Black Lives Matter” என்று அன்று எழுந்த போராட்டம் போன்று இப்பொழுது ஏனோ பெரிதாக ஒரு போராட்டம் இடம் பெறவில்லை. அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் இந்த சம்பவம் பெரிதாக பேசப்படவதாகவும் தெரியவில்லை



