ஆந்திரா சிக்கன் கிரேவி

 

சிக்கன் கிரேவி என்றால் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே சிக்கன் கிரேவியை எப்போதும் போல வைக்காமல் கொஞசம் காரசாரமாக ஆந்திரா ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சிக்கன்,
பெரிய வெங்காயம்,
பச்சை மிளகாய்,
கருவேப்பிலை,
கொத்தமல்லி,
மிளகு,
மல்லி,
சீரகம்,
சோம்பு,
காய்ந்த மிளகாய்,
அன்னாச்சி பூ,
பட்டை,
எண்ணெய்,
இஞ்சி பூண்டு பேஸ்ட்,
மிளகாய் தூள்,
மஞ்சள் தூள்,
உப்பு.

செய்முறை
சிக்கன் கிரேவி செய்ய மிளகு, மல்லி, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய், அன்னாசிப்பூ, பட்டை ஆகியவற்றை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் எண்ணெயில் நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அதில் சிக்கன், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

சிக்கன் வெந்ததும் அரைத்த மசாலாவை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி, இறுதியாக பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து வதக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஃப்ரை தயார்.