அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் இறுதியான நிலையில் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!!

 

அமெரிக்க – ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதியான நிலையில் ஹோர்முஸ் நீரிணை கப்பல்கள் கடந்து வருகின்றனர். ஹோர்முஸ் நீரிணை முடக்கத்தை கைவிடுவதாக அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து தற்போது அந்த பகுதி வழியாக கப்பல்கள் பயணிக்க தொடங்கியுள்ளன. ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் பொருட்கள் மற்றும் எல்பிஜி போக்குவரதானது ஓரளவுக்கு சீரடைய தொடங்கியுள்ளது. இந்தியாவின் அறிவிப்பின்படி ஈரான் மற்றும் அமெரிக்க இடையான அமைதி ஒப்பந்தமானது எட்டப்பட்டது.

அதிகாரப்பூர்வமாக இன்னும் அவர் கையெழுத்து போடவில்லை என்றாலும் இரு நாடுகளுக்கும் முன்வைத்திருக்க கூடிய உடன்பாடுகள் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் போர் முடிவுக்கு வந்துள்ளது. மிகமுக்கியமாக ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில், இந்த அறிவிப்பின் தொடர்ந்து முதல் இயற்கை எரிவாயு கப்பலானது ஹோர்முஸ் நீரிணை கடக்க தொடங்கியுள்ளது. அதை தொடர்ந்து இந்தியாவுக்கு சொந்தமான ஒரு எரிவாயு கப்பல் திஷா என்ற கப்பல் தற்போது ஈரான் வலைத் தடத்தில் ஹோர்முஸ் நீரிணை கடக்க தொடங்கியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக 20 % அளவுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது. 100 நாட்களுக்கு மேலாக நீடித்த முற்றுகை முடிவுக்கு வந்தது.