திடீரென அரசு மருத்துவமனைக்கு விசிட் அடித்த முதல்வர் விஜய்!.

 

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு திடீரென விசிட் அடித்தார். அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துணை கண்காணிப்பாளர்கள் என பலரும் உடன் இருந்தனர்.

அப்போது அங்கே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த சில பெண்களிடமும் அவர் உரையாடினார். அவர்களுக்கான வசதிகள் எப்படி இருக்கிறது? குறைகள் ஏதேனும் இருக்கிறதா? என கேட்டறிந்தார். மருத்துவமனையில் பல பிரிவுகளுக்கும் சென்ற முதல்வர் விஜய் அங்கிருந்து தலைமை மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்..

பொது மக்களுக்கு தரமான மருத்துவம், பாதுகாப்பு மற்றும் விரைவான மருத்துவ சேவைகள் கொடுக்கப்பட வேண்டும் என அங்கிருந்த மருத்துவர்களிடமும், அமைச்சர் அருண்ராஜிடமும் முதல்வர் விஜய் அறிவுறுத்தினார். இதை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.