சென்னையில் இலங்கை பெண் கொலை மற்றொரு சிறுமியும் பலி

 

சென்னை கோயம் பேட்டில் காரில் மோதி இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காயமடைந்த சிறுமியும் உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் காய மடைந்த நிலையில் வைத் தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 17 வயது டைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண், இன்ஸ்டாகி ராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், தோழியை பார்ப்பதற்காக சென்னை சென்ற யான்சி, இரவில் கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்ற நிலையில் அங்கு மற்றொரு தரப்பினருடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இருதரப்பினரையும் விடு தியின் பாதுகாவலர்கள் அங்கிருந்து வெளியேற்றி யுள்ளனர்.

இதனை தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் சென்ற யான்சி மீது முரண்பாட்டில் ஈடுபட்ட தரப்பைச் சேர்ந்த குழுவினர் காரை வேகமாக ஏற்றி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அதில் பலத்த காயம டைந்த யான்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதே மோட்டார் சைக்கி ளில் பயணித்த 17 வயதுடைய சிறுமி ஒருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கீழ்பாக்கம் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தின் பின்னர் அவர் சுயநினைவை இழந்திருந்ததாக வைத்தியர்கள் கூறியிருந்தனர். இந்நிலையிலே குறித்த சிறுமியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர் பாக கோயம்பேடு பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பாலகுரு, அவருடைய நண்பர் சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.