ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் சில மாதங்களுக்கு முன்பு தாக்குதலை தொடங்கியது. அதன்பின் அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தை ஏற்பட்டு தற்போது போர் நிறுத்தம் நீடித்து வருகிறது. ஒருபக்கம் இஸ்ரேல் லெபனான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஆனால் ஒப்பந்தத்தை மீறி லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுத குழு மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், அமெரிக்கா திபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் மீது கோபமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிட அவர் போனில் தொடர்பு கொண்டு பேசியதாக சொல்லப்படுகிறது.
அப்போது மிகவும் கோபத்துடன் பேசிய டிரம்ப் ‘நீங்கள் ஒரு பைத்தியம்.. நான் மட்டும் இல்லை என்றால் நீங்கள் இந்நேரம் சிறையில் இருந்திருப்பீர்கள்.. நான் உங்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.. இப்போது எல்லோரும் உங்களை வெறுக்கிறார்கள்.. இதன் காரணமாக இஸ்ரேலை அனைவரும் வெறுக்கிறார்கள்’ என்று அவர் கடுமையாக பேசியதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகிறது.
மேலும், நெதன்யாகுவிடம் போனில் பேசிய பின் ‘இஸ்ரேலின் எல்லா தாக்குதல்களும் நிறுத்தப்படும். இனிமேல் ஹிஸ்புல்லாவை இஸ்ரேல் தாக்காது.. அதேபோல் அவர்களும் இஸ்ரேலை தாக்க மாட்டார்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.




