350 அடி பள்ளத்தில் தள்ளி வருங்கால கணவரை கொன்ற இளம்பெண் – விசாரணையில் பின்னணி

 

மகாராஷ்டிராவில் பிரபல தொழிலதிபரின் மகன் 350 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த வழக்கில் அவரின் வருங்கால மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.காவல்துறையின் விசாரணையி, பலத்திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் தேவி சந்த் அகர்வால்.இவரது மகன் கேதன் அகர்வால். இவருக்கு புனேவை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகள் சியா பிரவீன் கோயல் (22 வயது )ஆகியோருக்கு 2026 பிப்ரவரியில் புனேவில் உள்ள ஒரு ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது .

திருமணம் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. திருமண நிகழ்ச்சிக்காக ராஜஸ்தானில் உள்ள புகழ் பெற்ற அரண்மனையை 17 கோடி ரூபாய்க்கு புக் செய்துள்ளனர். விருந்தினர்கள் வந்து செல்வதற்கு இரண்டு சொகுசு விமானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஜூன் 17 அன்று, சியா கேதனை அழைத்து, ஜூன் 18 அன்று தனது பிறந்தநாளுக்காக லோகட் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆரம்பத்தில் கேதனின் தாய் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் புகாரின்படி, சியா தனது வற்புறுத்தலில் விடாப்பிடியாக இருந்ததால் குடும்பத்தினர் இறுதியில் அதற்குச் சம்மதித்தனர்.

 

இதனை தொடர்ந்து இளம் பெண் சியா பிரவீன் கோயல் கடந்த 19ஆம் தேதி தான் தனது பிறந்த நாளை கொண்டாடுயுள்ளார். தனது வருங்கால மனைவியுடன் திருமணத்திற்கு முந்தைய போட்டோ சூட் நடத்த கேதன் அகர்வால் புனேவில் உள்ள புகழ் பெற்ற லோகட் கோட்டைக்குச் சென்றுள்ளார். அங்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நண்பர்களுக்காக சொகுசு விடுதியில் 40 அறைகளை புக் செய்துள்ளார்.

பின்னர் சியா மற்றும் கேதன் அகர்வால் இருவரும் போட்டோ சூட் தனியாக மலைப் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது காலை சுமார் 10:45 மணியளவில் எதிர்பாராத விதமாக 350 பள்ளத்தில் தவறி விழுந்து செய்து கேதன் அகர்வால் உயிரிழந்ததாக சியாவின் தாய் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். குடும்பத்தினர் சம்பவ இடத்திற்குச் செல்வதற்குள், காவல்துறையினரும் உள்ளூர் மக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர், மருத்துவர்கள் கேதன் இறந்துவிட்டதாக அறிவித்தனர். ஆரம்பத்தில், இந்தச் சம்பவம் ஒரு விபத்தாகக் கருதப்பட்டது.இளம்பெண் நடவடிக்கையில் காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். பின்னர் சியா பிரவீன் கோயல் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அவரது போனை பறிமுதல் செய்த காவல்துறையினர் சமூக வலைத்தள பதிவுகள், தொழில்நுட்ப சான்றுகள், காலர்ஸ் ஸ்ட்ரி உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்த போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

வருங்கால கணவன் கேதன் அகர்வாலை தனது காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்துவிட்டு விபத்து போல நாடகமாடியது தெரியவந்தது.இளம்பெண் சியா கோயில் ஏற்கனவே 22 வயதான சேத்தன் சவுத்ரி என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்தத சியாவின் பெற்றோர் கட்டாயப்படுத்தி தொழில் அதிபரின் மகனுக்கு பேசி முடித்துள்ளனர்.

ஆனால் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத இளம்பெண் சியா தனது காதலனுடன் சேர்ந்து அவரை கொலை செய்ய சாதித்திட்டம் போட்டுள்ளார். அதன்படி கொலை செய்ய சதி திட்டியுள்ளனர். இருவருக்கும் 2,004 தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்கள் சுமார் 238 மணி நேரம் பேசியதாகவும் காவல்துறை கண்டறிந்தது. வர்கள் சுமார் 238 மணி நேரம் பேசியதாகவும் காவல்துறை கண்டறிந்தது.

கேதன் அகர்வால் 2 முறை தப்பிய நிலையில் , சியா தன்னுடைய காதலனை கோட்டைக்கு ஜூன் 18 ஆம் னது காதலன் சைத்தான் சவுத் துறையை வரவழைத்துள்ளார் . பின்னர் அவரது வருங்கால மனைவி சியா கோயலும் அவரது காதலன் சேதனும் சேர்ந்து கேதனைக் பள்ளத்தில் தள்ளிவிட்டு கொலைசெய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் இந்த சதி செயலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? என்ற கோணத்தில் சாரணையை தீவிரப்படுத்தி உடனே தொழில் அதிபரின் மகருடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் 350 அடி பள்ளத்தில் தள்ளி அவரை கொலை செய்துவிட்டு விபத்து நாடகம் போட்ட வருங்கால மனைவி தனது காதலனுடன் கைது செய்யப்பட்டது மகாராஷ்டிராவில் அதிர்வலை ஏற்படுத்தி உள்ளது