11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு அழைப்பாணை

 

2008 – 2009 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று (10) இரண்டாவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதியன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.