செம்மணி புதைகுழி அகழ்வு: இன்றுடன் 318 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

 

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் 19 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

இதனடிப்படையில் இன்றுடன் (08-06-2026) 318 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றுள் 302 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளமிடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன

றுகுணு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.