அமெரிக்க நீர்மூழ்கி தாக்குதலால் கொல்லப்பட்ட 45 ஈரானிய கடற்படை வீரர்கள் உடல்களை ஒப்படைத்த இலங்கை
14 Mar,2026
இலங்கை அருகே இந்திய பெருங்கடல் பகுதியில் ஐஆர்ஐஎஸ் டேனா என்ற ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் கடந்த 4ம் தேதி நடத்திய தாக்குதலில் ஈரான் வீரர்கள் 87 பேர் உயிரிழந்தனர். 32 பேர் உயிர் தப்பினர். இந்த ஐஆர்ஐஎஸ் டேனா கப்பல், இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த மாதம் நடந்த மிலன் 2026 கூட்டு பயிற்சியில் பங்கேற்று விட்டு, ஈரானுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. உயிரிழந்த 84 ஈரான் மாலுமிகளின் உடல்கள் இலங்கையின் தெற்கு கடற்கரையில் உள்ள காலி துறைமுகத்தில் மீட்கப்பட்டு, காலி தேசிய மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. முதற்கட்டமாக 45 ஈரான் வீரர்களின் சடலங்கள் ஈரான் தூதரகத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.