புலிகளை புகழ் பாடமுடியாது! ஊடக மத்திய நிலையம் -ரஷ்யாவின் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில்!
25 Nov,2013
புலிகளை புகழ் பாடமுடியாது! ஊடக மத்திய நிலையம்
ஊடக சுதந்திரம் என்ற பெயரில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழீழ விடுதலைப் புலிகளின் புகழ்பாடுதல், போற்றுதல் சட்டவிரோதமானதென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
யாராவது அவ்வாறு நடந்துகொண்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிவரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டில் சில பகுதிகளில் புலிகள் இயக்கத்தை வளர்க்கவும் அதை பெருமைப்படுத்தவும் பல முயற்சிகள் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யாவின் கடற்படைக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில்!
ரஷ்யாவின் அட்மிரல் பான்ரெலியவ்', 'பேரேஸ்வட்', 'அட்மிரல் நெவில்ஸ்கி', 'போட்ரி க்ரிலோப்;', 'பெஷிங்க' ஆகிய 05 கடற்படைக் கப்பல்கள் நேற்று(24.11.2013) ஞாயிற்றுக்கிழமை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இந்தக் கப்பல்கள் ரஷ்யாவின் விளாடிவோஸ்ரொக் துறைமுகத்துக்குச் செல்லும் வழியிலேயே கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.