சபரிமலை யாத்திரிகர்களுக்கான விசேட அடையாள அட்டை, இலவச விசா வழங்கல்
23 Nov,2015
சபரிமலை யாத்திரிகர்களுக்கான விசேட அடையாள அட்டை, இலவச விசா வழங்கல்
இந்தியாவின் சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் இலங்கை யாத்திரிகர்களுக்கு இம்முறையும் விசேட அடையாள அட்டை, இலவச விசா வழங்கும் ஏற்பாடுகளை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
குறித்த விசேட அடையாள அட்டை, இலவச விசாவினை பெற்றுக் கொள்ள விரும்பும் ஐயப்ப பக்தர்கள் இலக்கம் 264, காலி வீதி, கொழும்பு – 04 எனும் முகவரியில் விண்ணப்பங்களைப் பெற்று உரிய அறிவுறுத்தல்களுக்கு அமைய தெளிவாகப் பூரணப்படுத்தி தேசிய அடையாள அட்டை, கடவுச் சீட்டு, பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் போட்டோ பிரதியையும் இணைத்து, 2.2வு2.2 அளவுள்ள இரு புகைப்படங்களில் ஒன்றை விண்ணப்ப படிவத்தில் ஒட்டி, பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தில் தங்கள் குருசாமியின் கையொப்பம், இறப்பர் முத்திரையிடல் ஆகியவற்றுடன் அனுப்பி வைக்குமாறு இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விபரங்களுக்கு, 011 255 264, 011 255 263