விமான நிலையத்தில் பொருட்களை தீயிட்டு கொளுத்திய பயணி.!
18 Nov,2018
பாகிஸ்தான் விமான நிலையத்திலிருந்து கிளம்பவிருந்த விமானம் ரத்தானதால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு கிளம்பவிருந்தது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது.
பின்னர் மோசமான வானிலை காரணமாக குறித்த விமானம் கிளம்புவது ரத்து செய்யப்பட்டது.
இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்த நிலையில் குறித்த விமான நிறுவனத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது விமான நிலையத்தில் இருந்த பயணி ஒருவர் தனது உடமைகளை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதன்பின்னர் வேறு விமானம் மூலம் அந்த பயணிகள் வெள்ளிக்கிழமையன்று அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுவரை பயணிகள் ஹொட்டலில் தங்க வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.