15 பெண்களை பாலியல் பலாத்காரப்படுத்திய வழக்கில் 20 பேருக்குத் தண்டனை
19 Oct,2018
2004 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் Huddersfield இல் 15 இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இருபது பேருக்கு இன்று லீட்ஸ் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
இக்குழுவின் தலைவரான 35 வயதான அமீர் சிங் தலிவாலுக்கு 18 ஆண்டுகளும் ஏனையவர்களுக்கு 5 முதல் 18 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
11 முதல் 17 வயதிற்குட்பட்ட இளம்பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட இவர்களின் செயல் வெட்கத்துக்குரியது மனிதாபிமானமற்றது எனவும் தீர்ப்பளித்த நீதிபதி தெரிவித்தார்.