நிர்வாணமாக ஓடிய நபரை ஓடஓட துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் அதிகாரி (அதிர்ச்சி வீடியோ)
28 May,2018
ஆடைகளற்ற நிர்வாண நிலையில் உள்ள ஒருவரை அமெரிக்காவின் ரிச்மாண்ட் நகர் காவல் அதிகாரி ஓடஓட துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
மார்கஸ் டேவிட் பீட்டர்ஸ் (Marcus-David Peters) என்பவர் இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பகுதிநேர காவலாளியாக பணிபுரிகிறார்.
இவர் விபத்துக்குள்ளான கார் ஒன்றில் இருந்து நிர்வாணமாக ஓடுவதும் அவரை காவல் அதிகாரி மைக்கேல் நியாந்தகி (Michael Nyantakyi) துப்பாக்கியால் சுடுவதுமான காட்சிகள் வெளியாகியுள்ளன.
மேலும் அவர் ஆடையற்ற நிலையில் ஓடும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.
நியாந்தகியால் சுடப்பட்ட டேவிட் பீட்டர்ஸ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
டேவிட் பீட்டர்சுக்கு நிகழ்ந்த சம்பவங்கள் குறித்தும் அவர் சுடப்பட்டதற்கான காரணம் குறித்தும் அவரது குடும்பத்தினர் விரிவான விசாரனை கோரியுள்ளனர்