33 தெய்வங்கள் ஹிந்து தர்மத்தில் –
13 Dec,2017
மற்ற எல்லா மதங்களுக்கும் முன்பே தோன்றி இன்று வரை அழியாமல் (அழிக்க
முடியாமல்) கற்பக விருட்சமாக வானுயர வளர்ந்து நிற்கும் ஒரே மதம் நமது ஹிந்து மதம் மட்டுமே. இந்த ஹிந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று அடிக்கடி சொல்வார்கள் அதற்கான உரிய விளக்கத்தை இங்கு காண்போம்.
மேலும் நமது ஹிந்து சனாதன தர்மத்தில் நம்முடைய தெய்வங்களின் எண்ணி க்கையைக் குறிப்பிடும் போது முப்பத்து முக்கோடி தேவர்கள் (Muppathu Mukkodi Devargal) என்று கூறி வருகிறோம்ஸ. முப்பத்து முக்கோடி என்பது 33 கோடி ஆகும். அப்படியானால் நமது ஹிந்து தர்மத்தில் 33 கோடி தெய்வங்கள் இருக்கின்றனவா?
“கோடி” என்பது எண்ணிக்கையைக் குறிக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிரு க்கிறோம்.. ஆனால் “கோடி” என்ற சொல் சமஸ்க்ருதத்தில் “ பிரிவு அல்லது வகை” என்பதைக் குறிக்கும். ஆக மொத்தம் 33 வகையான தெய்வங்கள் ஹிந்து சனாதன தர்மத்தில் உள்ளன.
அதில் 12 ஆதித்ய (Aditya)வகையாவன:
1. தாதா (Dhaatha)
2. மித (Mita)
3. ஆர்யமா (Aryama)
4. ஷக்ரா (Shakra)
5. வருண (Varuna)
6. அம்ஷ (Amsha)
7. பாக (Bhaaga)
8. விவாஸ்வான் (Vivaswan)
9. பூஷ (Poosha)
10. ஸவிதா (Savita)
11. தவாஸ்தா (Tavaasta)
12. விஷ்ணு (Vishnu)
வாசு 8 வகையாவன:
13. தர (Dhara)
14. த்ருவ (Dhruva)
15. சோம (Soma)
17. அனில (Anila)
18. அனல (Anala)
19. ப்ரத்யுஷ (Pratyusha)
20. ப்ரபாஷ (Prabaasha)
ருத்ரன் 11 வகையாவன:
21. ஹர (Hara)
22. பஹூரூப (Bahuroopa)
23. த்ரயம்பக (Trayambaka)
24. அபராஜிதா (Aparaajitha)
25. ப்ருஷாகாபி (Brushaakaapi)
26. ஷம்பூ (Shambu)
27. கபார்தி (Kapaardi)
28. ரேவாத் (Revaath)
29. ம்ருகவ்யாத (Mrugavyaadha)
30. ஷர்வா (Sharvaa)
31.கபாலி (Kapaali)
மற்றும் 2 அஷ்வினி குமாரர்கள்ஸஸஸ
மொத்தம் = 33 வகையான தெய்வங்கள். நாம் நம் தெய்வங்களை வழிபடும் போது இதை மனதில் வைத்து கொண்டு வழிபடுவோம்!