உதய நிலா சிரிக்கிறது..!
07 Sep,2017
உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு
உதய நிலா சிரிக்கிறது
கணக்கில்லாமல் வந்து வந்து
காமன் கணை பறக்கிறது
பழம் நழுவிப் பாற் குடத்தில்
பக்குவமாய் விழுகிறது
இளைய நிலா இன்ப வெள்ளம்
இதமாகப் பாய்கிறது
கட்டிலிலும் மெத்தையிலும்
கண்ணுறக்கம் மறுக்கிறது
கட்டி வைத்த கற்பு நெறி
கண்ணுக்குளே துடிக்கிறது
சித்தமெல்லாம் கவிதையிலே
சிந்து நடை பயில்கிறது
மொத்தமிந்த உலகம் என்னை
மெய் மறக்கச் செய்கிறது