வெள்ளை, பழுப்பு நிற முட்டைகள் பற்றி ஒரு அலசல்: ஆரோக்கியமானது எது?
09 Jul,2017
வெள்ளை லெக்கான் இனத்தைச் சார்ந்த கோழிகள் வெள்ளை முட்டைகளையும், செந்நிற கொண்டைகள் கொண்ட அமெரிக்கன், இங்கிலீஷ், ஏசியின் கோழி இனத்தின் வகைகள் பழுப்பு நிறமுள்ள முட்டைகளையும் இடுகின்றது.
நாட்டுக் கோழி முட்டையில் கலப்படம் உள்ளதா?
நாட்டுக்கோழிகள் சற்று பழுப்பு நிறமான வெள்ளை முட்டைகள் இடுபவை. அதனால் அளவில் சற்று பெரியதாக உள்ள பிராய்லர் கோழி முட்டைகளை, எடுத்து டீத்தூள் டிகாக்ஷனில் கலந்து, நாட்டுக்கோழி முட்டைகள் என்று கலப்படம் செய்து சில இடங்களில் விற்கப்படுகிறது.
ஆனால் பழுப்பு மற்றும் வெள்ளை முட்டைகளின் ஊட்டச் சத்த்துக்களை பொருத்தவரை எவ்வித மாற்றமும் இல்லை.
இதேபோன்று முட்டை ஓடுகளிலும் எவ்வித வேறுபாடும் கிடையாது, ஆனால் முட்டை அளவில் பெரியதாக இருப்பதால் விலையும் அதிகமாக உள்ளது.
முட்டையின் மஞ்சள் கருவில் வேறுபாடு உள்ளதா?
வெள்ளை மற்றும் பழுப்பு நிறமுள்ள முட்டைகளில் உள்ள மஞ்சள் கருவுக்கு எவ்வித வேறுபாடுகளும் இல்லை, ஆனால் கோழிகள் சாப்பிடும் உணவுக்கும், அதன் மஞ்சள் கருவுக்கும் மட்டும் தொடர்பு உள்ளது.
மக்காச்சோளம், சேந்தோபில் நிறமிகள், கீரை வகைகள், கீழா நெல்லி, அசோலா, ஆகிய அனைத்தையும் தீவனத்தில் கலந்து கோழிகளுக்கு கொடுக்கும் போது, அந்த கோழி போடும் முட்டையின் மஞ்சள் கருவின் மஞ்சள் நிறம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.