பிரான்ஸின் புதிய அதிபர் இம்மானுவல் மேக்ரன் யார்?

09 May,2017
 

.............................
             
ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலில், மையவாத வேட்பாளரான இம்மானுவல் மேக்ரன், மாபெரும் வெற்றி பெற்றிருப்பதாக கணிக்கப்பட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.



தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லெ பென்னை, 39 வயதான மேக்ரன், 65.5 சதத்துக்கு 34.5 சதம் என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருப்பதாக முடிவுகள் காட்டுகின்றன.

கடந்த 1958-ம் ஆண்டு பிரான்ஸின் நவீன குடியரசு ஏற்படுத்தப்பட்டது முதல், இரண்டு பிரதான கட்சிகளைத் தாண்டி, அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் வேட்பாளர் என்ற பெருமையையும் மேக்ரன் பெறுகிறார்.

தனது வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மேக்ரன், ஃபிரான்ஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் துவங்கியிருப்பதாகவும், இது நம்பிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெற்றி என்றும் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்றுத் தேர்தலுக்குப் பிறகு, முடிவுகள் வெளிவரத் துவங்கிய நிலையில்,மேக்ரனின் ஆதரவாளர்கள், வெற்றியைக் கொண்டாட, மத்திய பாரிஸ் நகரில் கூடியுள்ளனர்.

வெற்றி உறுதியானதும், தனது எதிர் வேட்பாளர் லெ பென்னைத் தொடர்பு கொண்டு மரியாதை நிமித்தமாக மேக்ரன் பேசியதாக அவரது பிரசார குழுவினர் தெரிவித்தனர்.



தேர்தல் முடிவு குறித்து பேசிய லெ பென், தனக்கு வாக்களித்த 11 மில்லியன் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந்த முடிவுகள், தேசப்பற்றாளர்களுக்கும், உலகமயமாக்கலுக்கு ஆதரவானவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவை வெளிப்படுத்துவதாகவும், புதிய அரசியல் சக்தி உருவாக வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

மேக்ரனின் வெற்றி, ஃபிரான்ஸ் மக்கள் ஒருமைப்பாட்டை விரும்புவதை வெளிப்படுத்துவதாக தற்போதைய அதிபர் பிரான்சிஸ் ஒல்லாந்த் தெரிவித்தார்.

இம்மானுவல் மேக்ரனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் தெரீசா மே உள்பட பல்வேறு உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.



கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஃபிரான்ஸ் மக்களுக்கு, இவர் யார் என்றே தெரியாத நிலையில், மேக்ரனின் வெற்றி பிரமிக்கத்தக்கது என்று பாரிஸில் உள்ள பிபிசி செய்தியாளர் ஹக் ஸ்கோஃபீல்டு கூறுகிரார்.

தாராளமய கொள்கை கொண்ட, மத்தியவாத மற்றும் வர்த்தகத்துக்கு ஆதரவான, ஒருங்கிணைந்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவானவர் மேக்ரன். இவரது எதிர் வேட்பாளர் லெ பென், ஐரோப்பிய ஒன்ரியத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிபர் ஃபிரான்சிஸ் ஒல்லாந்தின் அமைச்சரவையிலிருந்து வெளியேறிய மேக்ரன், இடதுசாரி மற்றும் வலதுசாரி அமைப்புக்களுக்கு மாறாக, இடைப்பட்ட நிலைப்பாட்டைக் கொண்ட ஓர் இயக்கத்தைத் துவக்கினார்.

முக்கிய சவால்?

இவரது இயக்கத்துக்கு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களே இல்லை.

அதே நேரத்தில், அதிபர் தேர்தலை அடுத்து நாடாளுமன்றத் தேர்தலும் ஜூன் 11 முதல் 18 வரை நடைபெற உள்ளன.

என் மார்சே (En Marche) என்ற அவரது இயக்கம், அரசியல் கட்சியாக தேர்தலில் போட்டியிடும் என்றாலும், முழுமையான ஆட்சிக்கு கூட்டணி ஆட்சியை அவர் ஏற்படுத்தியாக வேண்டும்.

அதிபர் மேக்ரான்.. 15 வயதிலேயே 25 வயது மூத்த டீச்சரை மணந்து அசத்தியவர்!- 

பிரான்சின் புதிய அதிபர் இமானுவேல் மேக்ரான் தேர்தலில் வெற்றி பெற்றதை காட்டிலும் அவரது திருமண வாழ்க்கை குறித்தே படு சூடாக பேசி வருகிறார்கள்.

பாரீஸ்: புதிய அதிபர் இமானுவேல் மேக்ரான் தேர்தலில் வெற்றி பெற்றதை காட்டிலும் அவரது திருமண வாழ்க்கை குறித்தே பரவலாக பேசப்பட்டு வருகிறது.


காரணம் இல்லாமல் இல்லை. பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலண்டே கடந்த 2012-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அவரின் பதவிக்காலம் இன்னும் சில நாள்களில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் அதிபருக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றது.



அதில் என் மார்சே கட்சியைச் சேர்ந்த இமானுவேல் மேக்ரான், தேசிய முன்னணி கட்சியைச் சேர்ந்த மரின் லீ பென் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.



இந்நிலையில் அதிபராவதற்கான பெரும்பான்மை ஓட்டுகளை யாரும் பெறாததால் இந்த தேர்தலானது மீண்டும் நேற்று நடத்தப்பட்டது. இதில் பிரான்ஸ் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. அதில் என் மார்சே கட்சியைச் சேர்ந்த இமானுவேல் மேக்ரான் 66 சதவீதம் ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.



39 வயதே ஆகும் மேக்ரான் வெற்றி பெற்றதை காட்டிலும் அவரது திருமண வாழ்க்கை குறித்துதான் எங்கும் பேச்சாக உள்ளது.


ஒரு பள்ளியில் நாடகங்களை கற்றுக் கொடுக்கும் டிராமா டீச்சராக இருந்தவரான பிரிகிடே டிரோக்நியூக்ஸ் என்பவர்தான் மேக்ரானின் மனைவி ஆவார்.


மேக்ரானுக்கு 15 வயதாக இருந்த தனது டீச்சர் மீது காதல் பிறந்தது. இதையடுத்து இருவரும் மணந்து கொண்டனர்.



பிரிகிடேவுக்கு அப்போதே 3 மகள்கள் இருந்தனராம். பருவ வயதை எட்டியவர்கள் அவர்கள். கடந்த 2007-ல் திருமணம் நடைபெற்றது.



தற்போது 64 வயதான பிரிகிடே தனது 39 வயது முன்னாள் மாணவனும், கணவனுமான மேக்ரானுக்கு அதிபர் என்ற மிகப் பெரிய நாடக மேடையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கற்றுக் கொடுக்கவுள்ளார்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies