கடந்த சனிக்கிழமை 22 வயது பயங்கரவாத இளைஞருடன் நடைபெற்ற மோதலில் படுகாயமடைந்த ஐந்து டேனிஸ் போலீசாரும் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
இவர்கள் ஆபத்தின்றி நலமாக வீடு திரும்பியமைக்கு மகிழ்வு வெளியிடப்பட்டுள்ளது.
———————————–
செய்தி 02
இன்றுள்ள ஆயுதங்களுடனும், பாதுகாப்பு வலையாக்கத்துடனும் டேனிஸ் போலீசார் பயங்கரவாதிகளுக்கு எதிராக செயற்பட முடியாது.
வீதியில் திடிரென ஒரு பயங்கரவாதி நடத்தும் தாக்குதலை முறியடிக்க மேலும் நவீன ஆயுதங்கள், உயிர்பாதுகாப்பு கவசங்களை போலீசாருக்கு மேலதிகமாக வழங்க வேண்டுமென டேனிஸ் மக்கள் கட்சி கூறியுள்ளது.
பயங்கரவாதிகளில் பலர் இன்னமும் மேடையேறாமல் கீழே நிற்கிறார்கள் என்பதால் எச்சரிக்கை மிக அவசியம்.
மேலும் சிறைச்சாலைகளிலும் பயங்கரவாதிகள் மூளை சலவைக்கு ஆவதை தடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.
———————————–
செய்தி 03
நேற்றுக் கூடிய டேனிஸ் பாராளுமன்றம் கடந்த சனிக்கிழமை பயங்கரவாதத் தாக்குதலால் கொல்லப்பட்ட இரண்டு பேருக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளது.
பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தத்தமது அஞ்சலிகளை வெளியிட்டுள்ளனர்.
———————————–
செய்தி 04
படுகொலை செய்யப்பட்ட 22 வயது பயங்கரவாத நபர் சிறையில் இருக்கும்போதே தான் ஐ.எஸ் அமைப்பில் சேர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதை சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தும் அந்த நபரை ஒரு தடவை விசாரணை செய்யாமல் இருந்தது டேனிஸ் உளவுப்பிரிவு செய்த தவறு என்று சுவீடன் நாட்டின் பயங்கரவாத ஆய்வாளர் மவுனுஸ் ரன்ஸ்ரொப் கூறியுள்ளார்.
கொல்லப்பட்ட இளைஞர் முகமது கேலிச்சித்திர ஓவியர் வருவதை தெரிந்தும், யூத குடியிருப்பில் நிகழ்வு நடப்பதைத் தெரிந்தும் இரண்டும் சமகாலத்தில் நடப்பதை அறிந்தும் தாக்குதல் நடத்தியிருப்பதால் அவருடைய செயல் திட்டமிடப்பட்தே என்பதை உணர்த்துவதாயுள்ளது.
———————————–
செய்தி 05
டென்மார்க்கில் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தினர் நடைபெற்ற தாக்குதலை தாமும் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளனர், அதேவேளை டேனிஸ் பிரதமர் இந்த விவகாரம் இஸ்லாமியர் – இஸ்லாமியர் அல்லாதவர் என்ற கோணத்தில் பார்க்கப்படமாட்டாது என்று டேனிஸ் பிரதமர் கூறியதை வரவேற்றுள்ளனர்.
அதேவேளை மற்றயவர்களும் இது போல ஒரு பரந்துபட்ட பார்வையை பார்க்க மறுப்பது கவலைக்குரியது என்றும் தெரிவித்துள்ளனர்.
———————————–
செய்தி 06
இன்று வெளியான போலீஸ் அறிக்கை கொல்லப்பட்ட 22 வயது நபர் குறுட்ருனன் என்ற கலாச்சார இல்லத்திற்குள் பல கதவுகளால் நுழைய முற்பட்டதாக தெரிவித்துள்ளது.
இவர் நடத்திய 28 துப்பாக்கிச் சூடுகளில் ஒரு குண்டிலேயே அங்கிருந்த திரைப்பட இயக்குநர் பின் நோகோட் மரணித்துள்ளார் என்றும் தெரிவிக்கிறது.
———————————–
செய்தி 07
டென்மார்க் வந்து உயிர்பிழைத்து சுவீடன் திரும்பியுள்ள முகமது கேலிச்சித்திர ஓவியர் லாஸ் வில்க்ஸ்சின் சுவீடன் கெல்சிங்போ நகர வீடு போலீசாரினால் யாரும் போக முடியாதபடி தடுக்கப்பட்டுள்ளது.
இரகசியமான இடமொன்றுக்கு இவர் மாற்றப்படும் வரை இந்தத் தடை தொடரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
———————————–
செய்தி 08
தனது மனைவியையும், முன்னாள் காதலியையும் மோசமான பாலியல் பலாத்காரம் செய்த 57 வயது நபருக்கு ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று மதியம் வடக்கு சேலண்ட் பகுதியில் இரண்டு கார்கள் நெற்றி முட்ட மோதியதில் ஒருவர் பரிதாப மரணமடைந்துள்ளார்.
கூய நகரத்தில் 78 வயது பெண்மணி ஒருவர் வீடெரிந்து மரணித்துள்ளார்.
———————————–
செய்தி 09
முன்னாள் டேனிஸ் அரசில்வாதியும், பாராளுமன்ற உறுப்பினருமான நாஸர் காடர் கொன்ஸ்சவேட்டிவ் கட்சியில் இணைந்து அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.
கட்சியின் ஓகூஸ் பகுதி வெற்றிடமாக இருப்பதால் இவர் அங்கு போட்டியிடலாம் என்று கருதப்படுகிறது.
இவருடைய வரவு பலமிழந்துள்ள கொன்ஸ்சவேட்டிவிற்கு புது இரத்தம் பாய்ச்சுமென அக்கட்சி கருதுகிறது.
———————————–
செய்தி 10
கடந்த சனிக்கிழமை 22 வயது பயங்கரவாத நபரால் கொல்லப்பட்ட 37 வயது யூத இளைஞனின் இறுதிச்சடங்கு இன்று பகல் 14.00 மணிக்கு நடைபெற இருக்கிறது.
கோப்பன்கேகன் மோசாசிக் வெஸ்ர இடுகாட்டில் நடைபெற இருக்கிறது.
tks.s.durai