டேனிஸ் இளைஞர் பிணையில் விடுதலை..
அமெரிக்காவில் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த 12 தினங்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்து 22 வயது டேனிஸ் இளைஞர் 4 லட்சம் அமெரிக்க டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர் நியூயோர்க் மான்கற்றன் பகுதியை விட்டு வேறிடங்களுக்கு செல்லக்கூடாதெனவும், பிள்ளைகள் பராமரிப்பு நிலையப்பக்கம் எட்டியும் பார்க்கக்கூடாதெனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிட்டால் இவரை மாட்டிவிட்ட மற்ற நபர் கைதாவார்.
மச்சத்தில் வரும் புற்று நோய்ஸ
டென்மார்க்கில் உள்ள 40 வயதுக்குக் குறைந்த இளையோரிடையே பிறப்பு மச்சத்தின் வழியாக வரும் தோல் புற்றுநோய் கடந்த 12 வருடங்களில் இரட்டிப்பாக உயர்வு கண்டுள்ளது.
முன்னர் ஆண்களில் ஓர் இலட்சம் பேருக்கு ஒன்பது பேர் என்ற நிலையில் இருந்து இப்போது 22 ஆக உயர்வு கண்டுள்ளது, பெண்களிலோ 25 ஆக உயர்ந்துள்ளது.
சிறுமி பாலியல் பலாத்காரம்
எஸ்பியா நகரத்தில் உள்ள மியூசியம் பகுதிக்கு அருகாமையில் கடந்த சனி இரவு 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார், சந்தேக நபரை தேடுகிறது போலீஸ்.
விபத்துக்கள்…
உலஸ்ரெப் நகரத்தில் நான்கு கார்கள் விபத்தில் சிக்குண்டன, முதலாவதாக இரண்டு கார்கள் நெற்றி முட்ட மோதின பின்னர் இரண்டு கார்கள் விபத்தை சந்தித்தன.
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் டென்மார்க் ருக் காப்புறுதி நிறுவனம் 1.3 பில்லியன் குறோணர்கள் இலாபம் உழைத்துள்ளது. சென்ற வருடம் போல காலநிலை சீர்கேடு இல்லாத காரணத்தால் இந்த இலாபம் கிடைத்துள்ளது.
டென்மார்க் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர் நாடகங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல மதிப்பிருக்கிறது. இதற்கான காரணத்தை ஆராய பல்கலைக்கழக மட்டத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சுவீடன் – டென்மார்க் நாடுகளுக்கு இடையில் உள்ள மல்ம்உய் பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.
தனது வலது குறைந்த 43 வயது மகளை கொலை செய்து பின் தானும் தற்கொலைக்கு முயன்ற 64 வயதுடைய தாய்க்கு டென்மார்க் நெஸ்ற்வில் நீதிமன்றம் 11 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
டென்மார்க்கில் உள்ள பெண்களில் பத்துப்பேருக்கு ஒருவருடைய முகத்தில் தாடி மீசை அரும்பக் காரணம் அவர்கள் குழந்தையாக உருவானபோது தந்தையின் கோமோன்கள் அதிகமாக இருந்த காரணத்தால் ஆண் தாக்கம் அதிகமுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டனின் பகழ் பெற்ற ஹர்ரிப்போட்டர் நாவல்களின் எழுத்தாளர் ஜே.கே. றோவ்லிங் தனது ஹரிபேட்டர் தொடர்களை இணையத்தில் வெளியிடுகிறார், நாளை பின்வரும் இணையத்தில் இது வெளியாகிறது. www.pottermore.com நேரமிருந்தால் பாருங்கள்.
TKS.S.DURAI