சர்வதேச அளவில் இந்த ஆண்டின் சிறந்த நகரமாக ஒஸ்ரியாவின் வியன்னா நகரம் தெரிவு
.
ஐரோப்பாவில் உள்ள ஒஸ்ரிய நாட்டின் வியன்னா நகரம் தேர்வாகியுள்ளது. இரண்டாவது இடத்திற்கு சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம் தெரிவாகியுள்ளது. நியுசிலாந்தின் தலைநகர் ஒக்லாண்ட் சர்வதேச அளவில் மூன்றாவது சிறந்த நகரமாக தெரிவ செய்யப்பட்டுள்ளது.
மெர்செர் கொன்சல்டிங் குறூப் (Mercer consulting group) நடத்திய ஆய்வில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மனியின் முனிஸ் நகரம் நான்காம் இடத்திலும் கனடா நாட்டின் வன்கூவர் நகரம் 5ஆம் இடத்திலும் உள்ளன.
ஆசியக் கண்டத்தில் சிறந்த நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ 2வது இடத்திலும், ஜப்பான் நாட்டின் கோபே, யோகஹாமா, ஒசாகா ஆகிய நகரங்கள் 3 இடங்களையும் பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் பங்களாதேஷ் தலைநகர் டாக்கா கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. ஆசியாவில் மிக மோசமான நகரமாகn டாக்கா பதிவாகியுள்ளது. இந்த ஆய்வில் 223 நகரங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தரவரிசையில் பின்தங்கிய “காதல் நகரம்”
.
பிரான்சின் தலைநகரான பாரிஸ், வாழ்க்கை தரத்தில் பின்தங்கி நிற்பதாக சமீபத்தில் வெளியான உலக தரவரிசைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ”காதல் நகரம்” “விளக்குகளால் மிளிரும் நகரம்” என பல்வேறு பெயர்களில் போற்றப்பட்டாலும், வாழ்க்கை தரம் என்பதில் முன்னிலை வகிப்பதில்லை என சமீபத்தில் வெளியான உலக தரவரிசை பட்டியலின் மூலம் தெரியவந்துள்ளது.
உலகில் உள்ள 223 நகரங்களில் ”காதல் மற்றும் பிரகாசமான நகரம்” என்ற பட்டியலில் ஆஸ்திரியா தலைநகர் வியன்னா, சுவிசின் சூரிச் மற்றும் நியூசிலாந்தின் ஆக்லாந்து முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.
தொடர்ந்து ஜேர்மனியின் மூனிச் 4ம் இடத்தையும், கனடாவின் வான்கூவர் 5ம் இடத்தையும், பாரிஸ் 27வது இடத்தையும் பிடித்துள்ளது.
ஐரோப்பாவில் மிகத்தரம் குறைந்த நகரமாக ஜார்ஜியாவின் திபிசிலி நகரம் இருக்கின்றது.
லண்டன் 38வது இடத்தையும், ஸ்பெயினின் மாட்ரிட் 50வது இடத்தையும் மற்றும் இத்தாலியின் தலைநகர் ரோம் 51வது இடத்தையும் பிடித்திருப்பதால் இவை அனைத்தும் பிரான்சை காட்டிலும் பின்னணியில் இருப்பதாக பிரான்ஸ் மக்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.