கணவரைப் பிரிந்து வாழும்.. பெண் காவலரை ‘காதல் வலையில்’ வீழ்த்தி செக்ஸ் வைத்துக்கொண்டதோடு, அவரிடமிருந்து பணத்தையும் நகையையும் பறித்துவந்த இளைஞரைக் கைதுசெய்து விசாரித்த போலீஸார்,
அவரது பின்னணியைக் கேட்டு அதிர்ச்சியாகியிருக்கின்றனர்!சென்னையைச் சேர்ந்த பெண் காவலர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர், தன் கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்துவருகிறார்.
இந்த நிலையில், ‘என்னை மறுமணம் செய்துகொள்வதாகக் கூறி, என்னுடன் உடலுறவு வைத்துக்கொண்ட வசந்த் என்ற இளைஞர்,
எனது பணம், தங்க நகை, புல்லட் உள்ளிட்ட பொருள்களை ஏமாற்றிப் பறித்துச் சென்றுவிட்டார்’ என 1-12-2025 அன்று அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் ராணி.
இந்தப் புகாரின் பேரில் வசந்த்தை போலீஸார் கைது செய்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள், விசாரணை போலீஸாரையே திடுக்கிட வைத்திருக்கின்றன.</
“பிசினஸ் தொடங்க பணம் தேவைப்படுகிறது..!”
இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், “எங்களிடம் புகார் கொடுத்த பெண் காவலருக்கு 2011-ம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது.
கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்தவர், தன்னுடைய குழந்தைகளுடன் காவலர் குடியிருப்பு ஒன்றில் வசித்துவந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வசந்த் என்ற இளைஞர் செல்போன் தொடர்பில் அறிமுகமாகியிருக்கிறார்.
நாளடைவில் இருவரிடையே நட்பு பலப்படவே, ராணியை நேரில் சந்திக்க சென்னைக்கு வந்திருக்கிறார் வசந்த்.
அப்போது ‘எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. நான் மலேசியாவில் பிசினஸ் செய்துவருகிறேன்.
உங்களையும் குழந்தைகளையும் நன்றாக கவனித்துக் கொள்கிறேன்’ என்று கூறி, ராணியிடம் தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார் வசந்த்.
அவரது பேச்சை நம்பிய ராணியும், வசந்த்தைக் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார்.
இந்தச் சூழலில், ‘நான் மலேசியாவிலிருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக வரவிருக்கிறேன்.
சென்னையில் புதிதாக பிசினஸ் தொடங்கிவிட்டு உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்’ எனக் கூறியிருக்கிறார் வசந்த்.
அதைக் கேட்டு சந்தோஷமான ராணியிடம், ‘பிசினஸ் தொடங்கக் கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது’ எனக் கூறி, ரொக்கமாக 3,40,000 ரூபாயையும் 6 சவரன் தங்க செயின், புல்லட் பைக் ஒன்றையும் கேட்டு வாங்கியிருக்கிறார்.
பின்னர் ராணி கொடுத்த புல்லட் பைக்கிலேயே அவரைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றதோடு, காவலர் குடியிருப்பிலேயே இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்திருக்கிறார்கள்.
திருமணம் குறித்து ராணி கேட்கும் போதெல்லாம், ‘பிசினஸைத் தொடங்கியதும் மேரெஜ் செய்துகொள்ளலாம்’ எனச் சமாளித்துவந்திருக்கிறார் வசந்த்.
சில தினங்களுக்கு முன்பு, ‘பிசினஸ் தொடங்க அவசரமாக 3 லட்சம் ரூபாய் கொடு’ என மேலும் பணம் கேட்டு வசந்த் நச்சரிக்கவே, சந்தேகப்பட்ட ராணி பணம் கொடுக்க மறுத்ததோடு, இது குறித்து காவல் நிலையத்திலும் புகாரளித்தார்.
“வேறு சில பெண் காவலர்களையும் ஏமாற்றியிருக்கிறான்..!
அதன்பேரில் வசந்த்தைப் பிடித்து விசாரித்தோம். விசாரணையில், அவரின் பெயர் சிங்காரவேல் என்பதும், ஏற்கெனவே அவருக்குத் திருமணமாகி, குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.
மேலும் சிங்காரவேலின் மனைவி வடமாவட்டக் காவல்துறையில் காவலராகப் பணியாற்றிவருவதும் தெரிந்து அதிர்ச்சியானோம்.
சிங்காரவேலிடமிருந்து ஒரு சவரன் தங்க செயின் உட்பட சில தங்க நகைகள், வெள்ளி நகைகள், இரண்டு செல்போன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்.
சிங்காரவேலின் செல்போனை ஆய்வுசெய்தபோது, அவர் ராணியிடம் பழகியதைப்போலவே இன்னும் வேறு சில பெண் காவலர்களிடமும் நெருக்கமாகப் பழகி, நகையையும் பணத்தையும் ஏமாற்றிவந்திருப்பது தெரியவந்திருக்கிறது” என்றனர்.
இந்த விவகாரத்தில் அடுத்த திருப்பமாக, சிங்காரவேலின் பின்னணி குறித்துப் பேசிய அண்ணாநகர் போலீஸ் உயரதிகாரி ஒருவர், “பாதிக்கப்பட்ட பெண் காவலர் ராணியும், சிங்காரவேலின் மனைவியான பெண் காவலரும் ஒரே ஆண்டில் காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் இருவரும் ஒரே இடத்தில்தான் காவலர் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
அதனால் இருவருக்குமிடையே ஏற்கெனவே அறிமுகம் இருந்திருக்கிறது.
இந்தச் சூழலில், தன்னுடைய மனைவியின் செல்போனிலிருந்தே ராணியின் செல்போன் நம்பரை எடுத்து, அவரிடம் ‘வசந்த்’ என்ற பெயரில் அறிமுகமாகியிருக்கிறார் சிங்காரவேல்.
பி.காம் பட்டதாரியான சிங்காரவேல், எந்த வேலைக்கும் செல்லாமல் மனைவியின் பேட்ஜைச் சேர்ந்த பெண் காவலர்களுக்குத் தொடர்ந்து காதல் வலை வீசி, அவர்களை ஏமாற்றிப் பணம், நகையைக் கைப்பற்றுவதோடு பாலியல்ரீதியாகவும் அவர்களை ஏமாற்றி அனுபவித்துவந்திருக்கிறார்.
இந்தக் குற்றத்தை ஒரு பேட்டர்னாகவே செய்துவந்திருக்கிறார்” என்று அதிர்ச்சி கொடுத்தார்.
<அப்பாவிப் பொதுமக்களை யாரேனும் ஏமாற்றிவிட்டால், போலீஸுக்குச் செல்லலாம். போலீஸையே ஒருவன் தொடர்ந்து ஏமாற்றியிருக்கிறான் என்றால், எங்கே செல்வதுஸ ஒருவரைக் குறித்து எதுவுமே தெரிந்துகொள்ளாமல் பொறுப்பான பணியில் இருப்பவர்கள் காதலில் விழலாமா?