"ஜூலை 5.." தேதியை குறிச்சு வச்சுக்கோங்க.. உலகை தாக்கும் பேரழிவு.!
17 Jun,2025
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்துச் சொன்னவர் பாபா வாங்கா.. இதற்கிடையே புதிய பாபா வாங்கா என்று அழைக்கப்படும் ரியா டாட்சுகி இன்னும் ஒரே மாதத்தில் மிகப் பெரிய பேரழிவு உலகைத் தாக்கும் என்று கணித்துள்ளார். அவரது கணிப்பு இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், இது குறித்து நாம் பார்க்கலாம். பொதுவாக நம் அனைவருக்குமே எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளப் பிடிக்கும். இதன் காரணமாகவே அதைக் கணித்துச் சொல்வோர் மீதான ஆர்வமும் அதிகரிக்கும்.
அப்படி வரும் காலங்களில் நடப்பவை குறித்த துல்லியமான கணிப்புகளைச் செய்பவர் மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி. புது பாபா வாங்கா இவரது கணிப்புகளில் பல அப்படியே நடந்துள்ள நிலையில், அவரை புதிய பாபா வாங்கா என்றும் கூட மக்கள் அழைக்கிறார்கள். இவர் கடந்த 2021ம் ஆண்டு வெளியான தி ப்யூச்சர் ஐ சா என்ற என்ற காமிக் புத்தகத்தில் செய்த கணிப்பே இப்போது உலகை அலறவிடுவதாக இருக்கிறது.
அடுத்த மாதம், அதாவது ஜூலை 5ம் தேதி ஜப்பானை ஒரு பேரழிவு தாக்கும் என்று இவர் கணித்துள்ளது. பேரழிவு தாக்கும் பிரபல சர்வதேச ஊடகமான டெய்லி மெயில் இதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அதேநேரம் என்ன மாதிரியான பேரழிவு ஜப்பானைத் தாக்கும் என்பது குறித்து டாட்சுகி குறிப்பிடவில்லை. இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் இருக்கிறார்களாம். அவரது இந்த பகீர் கணிப்பால் ஜப்பானுக்குச் சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளன. இதனால் ஜப்பானில் சுற்றுலா சார்ந்திருக்கும் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாத தொடக்கத்தில் புக்கிங் சுமார் 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஹாங்காங்கிலிருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளன. அதேநேரம் சீனா, தாய்லாந்து மற்றும் வியட்னாமிலிருந்து வரும் சுற்றுலா பணிகளின் புக்கிங் 83 சதவீதம் வரை குறைந்துள்ளன. டாட்சுகி கணிப்பிற்குப் பயந்து சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத்தை ஒத்தி வைக்கின்றனர்.. அல்லது பலரும் மொத்தமாகவே ரத்து செய்துவிடுகிறார்கள். இது ஜப்பானின் சுற்றுலாத்துறைக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஜப்பான் சுற்றுலா ஜப்பானுக்குச் சுற்றுலாத் துறை மிக முக்கிய பொருளாதாரமாக இருந்தது.
அது கொரோனா சமயத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு அதை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஜப்பான் சுற்றுலாத் துறை ஓரளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் கூட அது இன்னும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை. இந்த நேரத்தில் டாட்சுகியின் கணிப்பும் ஜப்பான் சுற்றுலாத் துறைக்கு வில்லனாக மாறியுள்ளது.
அசத்தும் ஜப்பான்! ஜப்பான் அரசு அதேநேரம் இந்த கணிப்புகளைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்றே ஜப்பான் அரசு கூறி வருகிறது. இது குறித்து மியாகி மாகாண ஆளுநர் யோஷிரோ முராய், "ஜப்பானியர்கள் யாருமே நாட்டை விட்டு வெளியேறவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் யாரும் பயப்படத் தேவையில்லை. மக்கள் வதந்திகளைப் புறக்கணித்துவிட்டு ஜப்பானுக்கு வர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். ரியோ டாட்சுகி இதற்கு முன்பும் கூட பல கணிப்புகளைச் செய்துள்ளார். அதில் பல கணிப்புகள் அப்படியே நடந்துள்ளன. குறிப்பாக மார்ச் 2011ல் ஜப்பானில் ஏற்பட்ட டோஹோகு நிலநடுக்கம் மற்றும் சுனாமி, டயானா இளவரசியின் மரணம், ஃப்ரெடி மெர்குரியின் மரணம் மற்றும் கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றை அவர் முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது.