இரானை நிலைகுலையச் செய்த தாக்குதல் ஒரு தொடக்கமே – இஸ்ரேலின் இறுதித் திட்டமும் அதீத ஆபத்தும்

15 Jun,2025
 

 
 
ஆபரேஷன் ரைஸிங் லையன் என்ற பெயரில் இரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் முன் எப்போதும் இல்லாத வகையில் இருக்கிறது.
 
கடந்த ஆண்டு இரண்டு தரப்பிலும் நடைபெற்ற ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் உட்பட முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகவும் விரிவுபடுத்தப்பட்ட, ஒரு லட்சியத்துடன் நடத்தப்படும் தாக்குதலாக இருக்கிறது.
 
1980-88 காலங்களில் நடைபெற்ற இரான் – இராக் போருக்குப் பிறகு இரான் மீதான மிகப்பெரிய தாக்குதலாக இது உள்ளது.
 
விடிவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதல்கள் இரானின் அணுசக்தி மையங்களை மட்டும் இலக்காக கொண்டிருக்கவில்லை.
 
இரானின் வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தளங்கள் போன்றவற்றையும் இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது இரான் பதில் தாக்குதல் நடத்துவதற்கான திறனை கணிசமாக குறைக்கிறது.
 
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்காக பணியாற்றும் நபர்களின் குழு களத்தில் இந்த தாக்குதலில் முக்கிய அங்கம் வகித்துள்ளது. இந்த குழுவே ராணுவத் தலைவர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகளின் துல்லியமான இடத்தை கண்டறிய உதவியதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இரான் இந்த தாக்குதலில் தன்னுடைய ஆறு ஆராய்ச்சியாளர்களை இழந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
 
தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:
 
இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்ப்படையின் (IRGC) தலைவர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்லாமிய புரட்சியின் பாதுகாவலர்களாக கருதப்பட்டவர்களில் ஒருவரான இவர் 1979-ஆம் ஆண்டு இரானின் ஷா ஆட்சிக்கு முடிவு கொண்டு வந்தவர்களில் முக்கியமான நபர் ஆவார்.
 
அவர் மட்டுமின்றி ஆயுதப்படைகளின் தலைவர், ஐ.ஆர்.ஜி.சியின் விமானப்படைத் தலைவர் ஆகியோரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
 
இரான் இந்த தாக்குதலில் தன்னுடைய 6 அணு விஞ்ஞானிகளை இழந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
 
இரானின் பாதுகாப்பு அமைப்பின் மையத்திற்குள் வெற்றிகரமாக ஊடுருவி, யாரும் அங்கு பாதுகாப்புடன் இல்லை என்பதை உணர்த்தியுள்ளது மொசாட்.
 
இரானின் அரசு தொலைக்காட்சி, இந்த தாக்குதலில் இதுவரை 78 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. குழந்தைகள் உட்பட சாதாரண குடிமக்களும் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது. (இது கொல்லப்பட்டவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இல்லை. பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை).
 
இந்த தாக்குதலின் ஒரு பகுதியாக, இரானுக்குள் இருந்தே மொசாட் அமைப்பு டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த தாக்குதலின் முதன்மை இலக்குகள் நடான்ஸில் அமைந்திருக்கும் அணு செறிவூட்டும் மையமும், ஐ.ஆர்.ஜி.சிக்கு சொந்தமான தளங்களும் தான். இப்படியான சூழலை இஸ்ரேல் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
 
இந்த தாக்குதல்களால் இரான் அதிர்ச்சி அடைந்துள்ளது. இது முதல் அலை மட்டுமே. இஸ்ரேலின் தாக்குதல் பட்டியலில் மேலும் பல சாத்தியமான இலக்குகள் உள்ளன. சில எளிதில் அடைய முடியாததாகவும் அதேநேரத்தில் நிலத்திற்கு அடியில் உள்ள தளங்களும் இந்த இலக்குப் பட்டியலில் இருக்கின்றன.
 
இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தக் காரணம் என்ன? அதை ஏன் இப்போது நடத்துகிறது?
இரானின் அணுசக்தி திட்டத்திற்கு முடிவு
 
இஸ்ரேலும் சில மேற்கத்திய நாடுகளும், இரான் ரகசியமாக அணு ஆயுத உற்பத்தியில் முன்னேறிச் செல்வதாக சந்தேகித்தன. அணு ஆயுத உற்பத்தியில் இருந்து பின் வாங்குவதற்கு இடமே அளிக்காத ‘பிரேக்அவுட் கேபபிலிட்டி’ என்ற கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று அவர்கள் நினைத்தனர்.
 
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இரான் தொடர்ச்சியாக மறுத்து வந்தது. மக்களின் தேவையை பூர்த்தி செய்யவே அணுசக்தி திட்டத்தை மட்டுமே, ரஷ்யாவின் உதவியோடு உருவாக்கி வருவதாகவும், அது அமைதிக்கான நோக்கங்களை மட்டுமே கொண்டுள்ளது என்றும் தெரிவித்தது.
 
பத்தாண்டுகளுக்கும் மேலாக இரானின் இந்த முயற்சியை பல்வேறு வடிவங்களில் தாமதமாக்க இஸ்ரேல் முயற்சி செய்து வந்தது. அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டது.
 
இரான் ஆராய்ச்சியாளர்கள் சிலர் மர்மமான முறையில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டனர்.
 
2020-ஆம் ஆண்டு டெஹ்ரானில் சாலை ஒன்றில்அணுசக்தி திட்டத்தின் தலைவராக பணியாற்றிய பிரிகேடியர் ஜெனரல் ஃபக்ரிஸாதே கொல்லப்பட்டார். ரிமோட் மூலமாக இயக்கப்படும் மெஷின் துப்பாக்கி மூலம் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
 
 
இரானின் ஆயுதப்படையின் தலைவர் முகமது பகேரி (இடது) உள்ளிட்டோர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர்
 
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சைபர் பிரிவு அதிகாரிகள் ‘ஸ்டக்ஸ்னெட்’ என்ற கணினி வைரஸை, இரானின் அணு ஆய்வுக் கூடத்தின் ‘சென்ட்ரிஃபூயூஜஸில்’ வெற்றிகரமாக செலுத்தியது. இது அந்த கருவியை கட்டுப்பாடு இல்லாமல் சுழற்றியது.
 
இந்த வாரம் ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (IAEA), இரான் அதனுடைய அணு ஆயுத பரவல் தடை உத்தரவாதத்தை( non-proliferation obligations) மீறுவதாகக் கண்டறிந்தது. இந்த விவகாரத்தை ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்புவதாகவும் எச்சரித்தது.
 
60% வரை செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (HEU) அளவுக்கு அதிகமாக இரான் சேமித்து வைக்கிறது. இதனால் இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ளன. மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் அணுசக்தியை உற்பத்தி செய்வதற்கு தேவையான அளவைக் காட்டிலும் யுரேனியம் அதிகமாக செறிவூட்டப்பட்டுள்ளது.
 
அணு குண்டை தயாரிப்பதற்கு தேவையான செறிவுக்கு மிக அருகில் யூரேனியம் செறிவூட்டப்பட்டு இரானில் சேமிக்கப்படுகிறது.
 
இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இது 2015-ஆம் ஆண்டு ஒபாமா ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது.
 
ஆனால் அடுத்து பதவிக்கு வந்த டொனால்ட் டிரம்பால் அது ‘உலகில் மிகவும் மோசமான ஒப்பந்தம்’ என்ற விமர்சனத்தைப் பெற்றது. அந்த திட்டத்தில் இருந்து அமெரிக்காவை அவர் விலக்கிக் கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டில் இருந்து, அந்த ஒப்பந்த விதிமுறைகளுக்கு ஏற்றபடி இரான் நடக்கவில்லை.
 
இரானைத் தவிர்த்து வேறு யாரும் அந்த நாடு அணு குண்டை வைத்திருப்பதை விரும்பவில்லை. 9.5 மில்லியன் மக்கள் தொகைக் கொண்ட, நகர்ப்புறங்களில் மக்கள் அடர்த்தியாக இருக்கும், ஒரு சிறிய நாடான இஸ்ரேல், அணு ஆயுதம் கொண்ட இரானை ஒரு அச்சுறுத்தலாக கருதுகிறது.
 
இரானின் மூத்த தலைவர்கள் பலரும் இஸ்ரேல் அரசை அழிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த பல அறிக்கைகளை இஸ்ரேல் சுட்டிக்காட்டுகிறது. சௌதி அரேபியா, ஜோர்டான், மற்றும் பல வளைகுடா அரபு நாடுகள் இரானின் புரட்சிகர இஸ்லாமிய குடியரசு குறித்து அதிக அக்கறை செலுத்தவில்லை. ஆனால் இரான் என்ற ஒரு அண்டை நாட்டுடன் அவர்கள் வாழ பழகிக் கொண்டனர்.
 
தற்போது அவர்களின் எல்லை வரை பிரச்னை பரவி வருவது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இஸ்ரேலுக்கு நேரம் மிகவும் முக்கியமானது. இரானின் கூட்டாளிகளை லெபனான், சிரியா மற்றும் காஸாவில் தோற்கடித்துவிட்டதால் இரான் ஏற்கனவே பலவீனம் அடைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் போது இரானின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் பலவீனம் அடைந்தன.
 
 
படக்குறிப்பு, தாக்குதலின் ஒரு பகுதியாக மொசாட் இரானுக்குள் இருந்தே டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது
 
இஸ்ரேலின் திட்டம் என்ன?
 
ஆபரேஷன் ரைஸிங் லையன் மூலமாக, பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான ஆராய்ச்சிகளில் பின்னடைவை ஏற்படுத்த இஸ்ரேல் விரும்புகிறது. முழுமையாக இதனை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறது.
 
இது இரானின் தலைமையை மேலும் வலுவிழக்கச் செய்து, ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் என்று இஸ்ரேல் ராணுவம், அரசியல் மற்றும் உளவுத்துறை வட்டாரங்கள் நம்புகின்றன. இதன் மூலமாக இந்த பிராந்தியத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத தீங்கற்ற ஆட்சி அமையும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை, ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள இரானுக்கு இரண்டாவது வாய்ப்பு இருந்ததாகக் கூறினார்.
 
இந்த ஞாயிறன்று மஸ்கட்டில் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே அணுசக்தி திட்டம் தொடர்பாக ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இந்த பேச்சுவார்த்தை மூலமாக எந்த விதமான பலனுள்ள முடிவுகளும் கிடைக்கும் என்று இஸ்ரேல் நம்பவில்லை.
 
யுக்ரேன் விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற பிம்பத்தை உருவாக்கியதாக ரஷ்யா மீது குற்றச்சாட்டு உண்டு. தற்போது இரானும் அதையே செய்வதாக இஸ்ரேல் நம்புகிறது.
 
இரானின் சந்தேகத்திற்குரிய அணு ஆயுத திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர இருக்கும் சிறந்த மற்றும் இறுதியான வாய்ப்பு இது என்று இஸ்ரேல் நம்புகிறது.
 
“இரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்ய டிரம்பிற்கு இருக்கும் வாய்ப்புகளை முறியடிக்கும் வகையில், இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் இரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளது,” என்று எலி கெரன்மாயே தெரிவித்தார். அவர் வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஐரோப்பிய கவுன்சிலில் (ECFR) மூத்த கொள்கை ஆராய்ச்சியாளராக உள்ளார்.
 
“இஸ்ரேல் தாக்குல் நடத்த தேர்ந்தெடுத்த நேரமும், அதன் தன்மையும் பேச்சுவார்த்தைகளை முற்றிலுமாகத் தடம் புரளச் செய்யும் நோக்கம் கொண்டவை என்பது தெளிவாகிறது.”
 
இந்த தாக்குதலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இரானிடம் அமெரிக்கா கூறி வருகிறது. ஆனால் பதில் தாக்குதலுக்காக இரான், அந்த பிராந்தியத்தில் உள்ள ஏதேனும் அமெரிக்க தளத்தின் மீது நேரடியாகவோ அல்லது அதன் கூட்டாளிகள் மூலமாகவோ தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் நடைபெறும் மற்றொரு மோதலில் அமெரிக்காவை இழுக்கும் அபாயம் ஏற்படும்.
 
இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, இந்த தாக்குதலுக்கு கடுமையான எதிர்வினை இருக்கும் என்று கூறியுள்ளார். உண்மையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இரான் மிகவும் வலுவிழந்துள்ளது. பதில் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன.
 
அணு ஆயுதப் போட்டி
 
இங்கே மேலும் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. இஸ்ரேலின் இந்த செயல்பாடு, அணு ஆயுத போட்டியைத் தூண்டலாம்.
 
இரானின் பாதுகாப்புக் கட்டமைப்பில் இருக்கும் தீவிர எண்ணங்களைக் கொண்ட தலைவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர். அதாவது எதிர்வரும் காலங்களில் இஸ்ரேல் அல்லது அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களை தடுக்க அணுகுண்டு வைத்திருப்பதே சரியானது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
 
லிபியா மற்றும் வட கொரியத் தலைவர்களுக்கு நேரிட்ட மாறுபட்ட நிகழ்வுகளை மதிப்பிட்டு இம்முடிவை அவர்கள் எடுத்திருப்பார்கள்.
 
லிபியாவின் கர்னல் கடாஃபி 2003-ஆம் ஆண்டு பாரிய அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை தயாரிப்பதற்கான திட்டத்தை கைவிட்டார்.
 
8 ஆண்டுகளுக்குப் பிறகு கால்வாய் ஒன்றில் இறந்த நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளின் வான்வழி தாக்குதலின் உதவியோடு நடைபெற்ற அரபு எழுச்சியின் முடிவில் கடாஃபி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.
 
இதற்கு முரணாக, வலிமையான அணு ஆயுதங்களை உருவாக்கவும், கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை உருவாக்கவும் வசதியாக வட கொரியா அனைத்து சர்வதேச தடைகளையும் மீறியது. எந்த ஒரு சாத்தியமான தாக்குதலையும் அந்த நாட்டின் மீது நடத்துவதற்கு முன்பு ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வைக்கும் சூழலை வடகொரியா உருவாக்கியது.
 
 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமையன்று, ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள இரானுக்கு இரண்டாவது வாய்ப்பு இருந்ததாகக் கூறுகிறார்
 
இஸ்ரேலின் தாக்குதலால் எத்தகைய இழப்பை சந்தித்தாலும், இரான் அரசு வீழாமல் தப்பித்தால் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தீவிரப்படுத்தும். அணு குண்டு சோதனை நடத்தவும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முன்பும் பல தடைகளை இரான் மீறி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது நிகழும் பட்சத்தில் மத்திய கிழக்கில் அணு ஆயுதங்களுக்கான போட்டியை இது உருவாக்கும். சௌதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து போன்ற நாடுகளும் தங்களுக்கும் அணு ஆயுதம் தேவை என்ற முடிவை எடுக்கக் கூடும்.



Share this:

India

India

Malaysia

Srilanka

Srilanka

Vietnam

Srilanka

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies