"இதுதான் என் நிர்வாண படங்கள்.."
03 Jun,2025
ஷாக் கொடுத்த பெண் எம்பி! அதிர்ந்த நியூசிலாந்து பார்லிமென்ட்
நியூசிலாந்து நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அவரே தனது நிர்வாண படங்களை நாடாளுமன்றத்தில் காட்டியிருக்கிறார். இதைப் பார்த்து நியூசிலாந்து எம்பிக்கள் அதிர்ந்து போனார்கள். அவர் ஏன் அதுபோல செய்தார். நிர்வாண படங்களை அவர் காட்ட என்ன காரணம் என்பது குறித்து சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நியூசிலாந்து எம்பி ஒருவர் தனது நிர்வாண படங்களைத் தானே நாடாளுமன்றத்தில் காட்டியிருக்கிறார். இது மிகப் பெரியளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த நிர்வாண படங்கள் எல்லாம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது. ஏஐ எந்தளவுக்கு ஆபத்தை உருவாக்கும் என்பதை உணர்த்தவே அவர் ஏஐ நிர்வாண படங்களை அவர் நாடாளுமன்றத்தில் காட்டியிருக்கிறார்.. டீப் பேக் நியூசிலாந்தில் உள்ள ஏசிடி கட்சியின் லாரா மெக்லூர் என்பவரே இதைச் செய்துள்ளார்.
வெறும் சில நிமிடங்களில் கூகுள் செர்ச் மூலம் கிடைத்த இணையதளங்களைப் பயன்படுத்தி நொடிகளில் இந்த டீப் பேக் இமேஜை உருவாக்கியதாக அவர் குறிப்பிடுகிறார். ஏஐ மற்றும் டீப் பேக் எந்தளவுக்கு ஆபத்தானதாக மாறலாம் என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.. இது குறித்து அவர் பேசும்போது, "இது என்னுடைய நிர்வாணப் படம்.. ஆனால் இது உண்மையானது இல்லை.. எனது டீப் பேக் படங்களை உருவாக்க எனக்கு ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரமே ஆனது" என்று பேசியிருந்தார்.
அவரது இந்த செயல் நியூசிலாந்து நாடாளுமன்றம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆபத்து பிறகு இது தொடர்பாக சோஷியல் மீடியாவில் அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், "இதைச் செய்வது எவ்வளவு ஈஸி.. இவை நியூசிலாந்து மக்களுக்கு, குறிப்பாக இளம் பெண்களுக்கு எவ்வளவு தீங்கை விளைவிக்கலாம் என்பதை நான் மற்ற எம்பிக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவே இதை நான் செய்தேன். தொழில்நுட்பத்தால் இதில் பிரச்சினை இல்லை. அதை எப்படி ஒருவர் பயன்படுத்துகிறார் என்பதே பிரச்சினை..
நமது சட்டங்கள் அதைச் சரியாகக் கையாள வேண்டும் அந்த படத்தை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டுமா என யோசித்தேன்.. அச்சமாகக் கூட இருந்தது. ஆனால் டீப் பேக் மூலம் எந்தளவுக்குப் பாதிப்புகள் ஏற்படும். இதைச் சரியாகக் கையாள புதிய சட்டங்கள் எந்தளவுக்கு முக்கியம் என்பதை உணர்த்தவே அதைக் காட்டினேன்.. நியூசிலாந்தில் தற்போது இருக்கும் சட்டங்களை வைத்து டீப் பேக்கை கட்டுப்படுத்த முடியாது.
டீப் பேக் சட்டம் டீப் பேக் டிஜிட்டல் மசோதா என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். அது பழிவாங்கும் நோக்கில் ஆபாசப் படங்களை உருவாக்குவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப் பயன்படும். ஒருவரது ஒப்புதல் இல்லாமல் டீப் பேக்குகளை உருவாக்குவது அல்லது பகிர்வது குற்றமாக மாற்றும். பாதிக்கப்பட்டவர்கள் அந்த கண்டெண்டுகளை எப்படி அகற்றலாம் என்பது குறித்த தெளிவான வழிகளையும் வழங்கும்" என்றார். Also Read இந்தியாவில் அதிகரிக்கும் AI வல்லுநர்களின் தேவை! அடுத்த ஓராண்டில் 10 லட்சம் வேலைகள் உருவாகும் ஏஐ சிக்கல் ஏஐ என்பது பல வழிகளில் மனிதர்களுக்கு உதவியாகவே இருக்கிறது.
அதேநேரம் ஏஐ காரணமாகப் பல ஆபத்துகளும் ஏற்படலாம் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக வேலையிழப்பு மற்றும் இதுபோன்ற டீப் பேக் ஆபத்து இருப்பதாகத் தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நியூசிலாந்தில் வல்லுநர்கள் கூறுகையில், "பெரும்பாலான டீப் பேக் ஆபாசப் படங்கள் ஒப்புதல் இல்லாமல் உருவாக்கப்படுகின்றன.. இதனால் எந்தவொரு பெண்ணும் பாதிக்கப்படலாம். எனவே அதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.