நாளை பூமியின் கடைசி நாளாக இருக்கலாம்.
17 May,2025
.
சூரியனிலிருந்து வெளி வந்திருக்கும் காந்த புயல் நாளை பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது பல டிரில்லியன் அளவுக்கான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சூரியனிலிருந்து இந்த புயல் கிளம்பியிருக்கிறது. சுமார் 10 லட்சம் கி.மீ நீளம் கொண்டிருக்கும் இது, நிலவுக்கு பக்கத்தில் வந்தாலே பூமியில் பாதிப்புகள் ஏற்பட தொடங்கிவிடும்.
காந்த துண்டை ஒரு நூலில் கட்டி தொங்கவிட்டால் அது வடக்கு-தெற்கு திசை பக்கம் பார்த்து நிற்கும். இதனை காந்த புலம் என்று சொல்வார்கள். பூமியில் இருப்பதை போலவே சூரியனிலும் காந்த புலம் இருக்கிறது. நம்முடைய நிலையானது என்று சொல்லலாம். ஆனால், சூரியனின் காந்தபுலம் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும். இப்படி நடக்கும்போது சூரியனிலிருந்து காந்த புயல் வெடித்து கிளம்பும். நேற்று முன்தினம் இப்படித்தான் வெடித்து கிளம்பியுள்ளது. இது இப்போது பூமி பக்கம் திருப்பியிருக்கிறது என்றும், நாளை பூமியை தாக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பறவையின் சிறகு சூரியனின் வடக்கு அரைக்கோளத்தில் ஏற்பட்ட இந்த வெடிப்பை நாசாவின் செயற்கைக்கோள்கள் துல்லியமாக படம் பிடித்திருக்கின்றன.
இப்படி கிளம்பிய புயலுக்கு 'பறவையின் சிறகு' என்று பெயரிட்டிருக்கின்றனர். ஏனெனில் இப்புயல் பார்ப்பதற்கு பறவையின் சிறகை போல இருந்திருக்கிறது. எனவேதான் இந்த பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. விஞ்ஞானிகள் சொல்வதென்ன? 'அரோரா சேஸர்ஸ்' எனும் வானியல் ஆய்வு அமைப்பை சேர்ந்த ஆய்வாளர் ஜூர் அதனகோவ், இந்த புயல் பூமியை தாக்க கூடும். பூமியில் பெரிய அளவுக்கு மின்காந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
இவர் சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறது. அதாவது நேற்று முன்தினம் சூரியனில் வெடிப்பு ஏற்பட்டபோது சூரியன் பக்கமாக பார்த்து இருந்த வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய கண்டங்களில் சில பகுதிகளில் ரேடியோ சிக்னல்கள் பாதிக்கப்பட்டிருகின்றன என்று 'லைவ் சயின்ஸ்' இதழ் கூறியுள்ளது.
மொத்த பிரபஞ்சமே சீக்கிரமா அழிய போகுது! மனித குலம் என்ன ஆகும் தெரியுமா!" ஆய்வாளர்களின் கூற்றுபடி, இந்த புயல் விநாடிக்கு 200-300 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது. அநேகமாக நாளை இது பூமியை கடந்து செல்லலாம். அந்த சமயத்தில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும். பாதிப்புகள் என்னென்ன? இதேபோன்று ஒரு புயல் கடந்த 1989ம் ஆண்டு கனடாவின் கியூபெக் பகுதியை தாக்கியிருந்தது. இதனால் இந்த பகுதியில் 12 மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டிருந்தது. ஒருவேளை இப்போது வரும் புயல் வலுவாக இருந்தால், மின்சார டிரான்ஸ்பார்மர்கள், மின் வயர்கள் போன்றவற்றை சேதப்படுத்தலாம். ஜிபிஎஸ், தொலைத்தொடர்பு மற்றும் வானிலை செயற்கைக்கோள்கள் செயலிழக்க கூடும். ரேடியோ சிக்னல்கள் பாதிக்கப்படலாம்.
பூமிக்கு பேராபத்து.. விஞ்ஞானிகள் வார்னிங்" டிரில்லியன் கணக்கில் சேதம் விமானம், கப்பல் உள்ளிட்டவற்றிற்கு தொலைதொடர்பு சேவை பாதிக்க கூடும். மொபைல் நெட்வொர்க்குகள் மற்றும் இணைய வேகம் குறையலாம். வழக்கமாக பூமியின் வட கோளங்களில் அரோரா ஒளி தெரியும். ஆனால் இந்த சமயத்தில் இந்தியாவின் வட மாநிலங்களில் கூட இந்த அரோரா தெரிய வாய்ப்புகள் இருக்கின்றன. சிம்பிளாக சொல்வதெனில் இன்றைய தேதியில் இந்த சூரிய புயல் டிரில்லியன் கணக்கில் சேதங்களை ஏற்படுத்த கூடும். புயல் மிக பலமாக இருந்தால், அது ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து பூமி மீண்டு வர, பல ஆண்டுகள் வரை ஆகலாம். அந்த வகையில் நாளை பூமிக்கு கடைசி நாளாக இருக்கலாம்