செவ்வாயில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உண்மை!
13 May,2025
நாசா இன்சைட் மிஷனில் அனுப்பியிருந்த உயர் தொழில்நுட்ப கருவி ஒன்று செவ்வாய் கிரகத்தில் நடந்த விண்கல் மோதல் மற்றும் நிலநடுக்கம் பற்றிய தரவுகளை பூமிக்கு அனுப்பியிருந்தது. இந்த தரவுகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்திருக்கின்றனர்.
1.6 கோடி கிமீ தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்! மனித குலத்துக்கு விடிவுகாலம் வந்துடுச்சு!" கடந்த 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதற்கான ஆதாரங்கள் கிடைததிருக்கின்றன. ஆனால், இந்த நீர் இப்போது எங்கே போனது என்பதுதான் கேள்வி. இந்த கிரகத்தின் மின்காந்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது ஏறத்தாழ மின்காந்தமே இல்லாமல் போயிருக்கிறது. இதனால் வளிமண்டலம் முற்றிலுமாக சிதைந்து, சூரிய ஒளி அதிகரித்திருக்கிறது.
இது நீரை ஆவியாக்கியிருக்கலாம். அதேபோல செவ்வாய் கிரகத்தின் துருவ பகுதிகளில் நீர் ஐஸ் கட்டிகளாக இன்னமும் இருக்கிறது. இப்படித்தான் நீர் காணாமல் போயிருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், விஞ்ஞானிகள் இதனை நம்பவில்லை. இவ்வளவு நீரும் ஆவியாகியிருக்காது என்று அவர்கள் கூறுகிறார்கள். அப்படியெனில் அந்த நீர் எங்கே? ஒருவேளை பூமிக்கு அடியில் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே இதனை ஆய்வு செய்யதான் நாசா இன்சைட் மிஷனை செயல்படுத்தியிருந்தது. Powered By இந்த மிஷன் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட சூப்பர்-சென்சிட்டிவ் சீஸ்மோமீட்டர் எனும் உயர் தொழில்நுட்பம் கொண்ட கருவியானது, அந்த கிரகத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையும், விண்கல் மோதலையும் பதிவு செய்திருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் S1000a மற்றும் S1094b என இரண்டு விண்கல் மோதல்கள் நடந்தன. அதேபோல 2022ல் நிலநடுக்கமும் ஏற்பட்டிருக்கிறது.
விஞ்ஞானிகள் வார்னிங்" இந்த தரவுகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகளுக்கு ஷாக். காரணம் நீர் இருப்பதற்கான அனைத்து சாத்திய கூறுகளும் இந்த தரவுகள் மூலம் தெரிய வந்திருக்கின்றன. அதாவது, விண்கல் மோதல்/நிலநடுக்கம் நேரத்தில் 'ஷியர் அலைகள்' உருவாகியிருக்கின்றன. ஒரு குளத்தில் கல்லை விட்டு எறியும்போது அது எப்படி அலைகளை உருவாக்குகிறதோ, அதேபோன்ற அலையை விண்கல் மோதலும், நிலநடுக்கங்களும் உருவாக்கியுள்ளன.
தண்ணீர் இருக்கும் பகுதியில்தான் இப்படியான அலைகள் உருவாகும். செவ்வாய் கிரகத்தில் இது எப்படி உருவானது என்பதே தற்போதைய கேள்வி. சரி இந்த விஷயம் ஏன் நமக்கு முக்கியம்? என்று உங்களுக்கு கேட்க தோன்றலாம். நாம் இப்போது இருக்கும் பூமியை கடைசி வரை நம்பிக்கொண்டிருக்க முடியாது. பூமி மீது எப்போது வேண்டுமானாலும் விண்கல் தாக்குதல் நடக்கலாம். எனவே நமக்கு இன்னொரு கோளை ரெடி செய்து வைத்துக்கொள்வது அவசியம். அந்த வகையில், செவ்வாய் நமக்கு இருக்கும் முதல் ஆப்ஷன். அங்கு தண்ணீர் இருக்கிறது எனில், அதை நமக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பது இன்னும் எளிதானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.